ஒரு ஊரில் காகமொன்று இருந்தது. அது கருப்பு நிறத்தில் இருப்பதை வெறுத்தது.
ஒரு நாள் ஒரு குளக்கரையில் இருந்த மரத்தின் மீது அமர்ந்திருந்தது.
அப்போது அந்தக் குளத்து நீரில் இரு அன்னப்பறவைகள் நீந்திக் கொண்டிருந்தன.
அவற்றைப் பார்த்த காகம்' அந்த அன்னப்பறவைகளைப் போல நான் வெள்ளையாக இல்லையே' என வருந்தியது.
அந்தப் பறவைகளைப் போல நாமும் தண்ணீரில் நீந்தினால் தன் சிறகுகளில் இருக்கும் கரிய நிறம் போய் வெண்மை நிறம் வந்துவிடலாம் என எண்ணியது.
உடனே... அன்று முழுதும் அது தண்ணீரில் நீந்தியது. தன் இறகுகளை தேய்த்து... தேய்த்துப் பார்த்தது. அதனால் சில இறகுகளையும் இழந்தது.
அதைப் பார்த்த அன்னப் பறவைகளில் ஒன்று காகத்திடம், ”இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு உருவம், நிறம் பெற்றவை. அதை மாற்ற நினைத்தால் நடக்காது” என அறிவுரை கூறியது. மேலும் அது, “கடவுள்... எந்த உடற்குறையும் கொடுக்காமல் படைத்ததற்கு நன்றி சொல்லவேண்டும்” என்றது.
ஒருவன் கருப்பா, சிவப்பா என்பதில் உயர்வு, தாழ்வு இல்லை. அவர்கள் செய்யும் செயல்களில் தான் அவை இருக்கின்றன என்பதை உணர வேண்டும்.