Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam muthukamalam
உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.

முத்து: 14 கமலம்: 4
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Children - Parable
சிறுவர் பகுதி - குட்டிக்கதை

வீடு தேடி வந்தவருக்கு... விருந்து!


நீண்ட காலத்துக்கு முன்னர், அனான்சி என்ற சிலந்தி வாழ்ந்து வந்தது. அது மிகவும் பேராசை பிடித்ததாக இருந்தது. அதனால், அது தன்னுடைய பொருட்கள் எதையும் மற்றவர்களுடன் எப்போதுமே பகிர்ந்து கொள்ளாது. ‘பகிர்ந்துண்டு வாழ்வாரே வாழ்வர்’ என்பதை அது புரிந்து கொள்ளவில்லை.

ஒரு நாள், அது தன்னுடைய தோட்டத்தில் விளைந்த சுவையான சேனைக் கிழங்குகளைச் சமைத்துக் கொண்டிருந்தது. சேனைக்கிழங்கின் வாசனை அதன் மூக்கைத் துளைத்து மேலும் பசியை உண்டு பண்ணியது. ஆனால், எப்படியோ மதிய உணவுவேளை வரும் வரை பொறுமையுடன் காத்திருந்தது.

அது தன்னுடைய சுவையான சேனைக் கிழங்குகளைச் சாப்பிடத் தயாராக இருக்கும் போது, யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அனான்சிக்கு ஒரே கோபமாக வந்தது. அதே கோபத்துடன் வேகமாக வந்து கதவைத் திறந்தது. பார்த்தால், கோசோ என்ற ஆமை அங்கே நின்று கொண்டிருந்தது. அது நீண்ட தூரம் பயணித்து வந்த களைப்பிலும் பசியிலும் இருந்தது.

“வணக்கம் அனான்சி, நீ என்ன சமைத்துக் கொண்டிருக்கிறாய்? ஏதோ நல்ல சுவையாக சமைத்து வைத்திருக்கும் வாசனை வருகிறது” என்றது கோசோ.

“ஓ, ஆமாம், இன்று மதிய உணவுக்காகச் சேனைக்கிழங்குகள் சமைத்திருக்கிறேன்” என்று தயக்கத்துடன் சொன்னது அனான்சி.

“ஓ, அப்படியா? நீண்ட பயணம் முடித்து திரும்பியிருப்பதால் களைப்புடனும் பசியுடனும் இருக்கிறேன். இன்று உன்னுடன் நான் சாப்பிடலாமா?” என்று கேட்டது கோசோ.

அனான்சிக்கு கோசோவுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதில் சற்றும் விருப்பமில்லை. ஆனால், உணவு நேரத்தில் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது அந்த நாட்டின் வழக்கம். அதனால், அனான்சியால் மறுக்க முடியவில்லை. ஆனால், எப்படியிருந்தாலும் கோசோவுடன் சேனைக்கிழங்குகளைப் பகிர்ந்து கொள்ள கூடாது என்ற முடிவுடன் இருந்தது.

“அதற்கென்ன தாராளமாக, உள்ளே வா! இந்த இருக்கையில் உட்கார்! நான் உனக்கு சாப்பிட எடுத்து வருகிறேன்” என்று அனான்சி கோசோவிடம் சொன்னது.

இருவரும் சாப்பிடத் தயாரானார்கள். அப்போது, திடீரென்று அனான்சி கோசோவை சாப்பிட விடாமல் தடுத்தது.

“சாப்பிடுவதற்கு முன்னால் கைகளைக் கழுவ வேண்டுமென்பது உனக்குத் தெரியாதா? போய், உன் கைகளைச் சுத்தமாகக் கழுவிக் கொண்டு வா!'' என்றது அனான்சி. கோசோ தன்னுடைய கைகளைப் பார்த்தது. பயணத்திலிருந்து அப்படியே சாப்பிட வந்ததால் அவை மிகவும் அழுக்காக இருந்தன. அருகிலிருக்கும் ஆற்றுக்குச் சென்று கைகளைக் கழுவி கொண்டு வந்தது கோசோ.

அதற்குள் அனான்சி சாப்பிடத் தொடங்கியிருந்தது. “சேனைக்கிழங்குகள் ஆறிப்போய்க் கொண்டிருந்தன. அதனால் சாப்பிடத் தொடங்கி விட்டேன். நீயும் என்னுடன் சாப்பிடத் தொடங்கு!” என்றது அனான்சி.



ஆனால், மறுபடியும் அதே காரணத்தைச் சொல்லி கோசோவை சாப்பிடவிடாமல் திருப்பி அனுப்பியது அனான்சி. பாவம் கோசோ! அது தன்னுடைய கைகளைப் பார்த்தால் மீண்டும் அவை அழுக்காகியிருந்தன. ஆற்றிலிருந்து வீட்டுக்குவரும் வழியில் மீண்டும் அதனுடைய கைகள் அழுக்காகியிருந்தன.

கோசோ மிகவும் சோர்வடைந்துவிட்டது. ஆனாலும் மறுபடி ஆற்றுக்குச் சென்று தன் கைகளைக் கழுவிக் கொண்டு வந்தது. இந்தத் தடவை கைகள் அழுக்காகிவிடக் கூடாது என்பதற்காகக் கவனமாகப் புற்களின் மீது நடந்து வந்தது. ஆனால், இந்த முறை அது திரும்பி வருவதற்குள் அனான்சி கிட்டத்தட்ட எல்லாவற்றையும் சாப்பிட்டு முடித்திருந்தது. ஒரேயொரு சேனைக்கிழங்கு துண்டு மட்டும்தான் கோசோவுக்குக் கிடைத்தது.

கோசோ கோபத்தோடு அவமானத்தோடும் கிளம்பத் தயாரானது. “உன்னுடைய சுவையான உணவுக்கு நன்றி! ஒருநாள் நீயும் என் வீட்டுக்குச் சாப்பிட வர வேண்டும்” என்று கூறிவிட்டு கோசோ புறப்பட்டுச் சென்றது.

சில நாட்கள் கழித்து, அனான்சிக்கு கோசோவின் அழைப்பு நினைவுக்கு வந்தது. கோசோவின் வீட்டுக்குச் சென்று அறுசுவை உணவு சாப்பிட முடிவு செய்தது. ஏனென்றால், கோசோவின் சமையல் கைப்பக்குவத்தைப் பற்றி அதற்குத் தெரியும்.

அடுத்த நாள், ஆற்றங்கரைக்கு அடியில் இருக்கும் கோசோவின் வீட்டுக்கு அருகில் அது வந்தது. அனான்சியைப் பார்த்த கோசோ, “வணக்கம் அனான்சி, என் அழைப்பை ஏற்று சாப்பிட வந்ததுக்கு நன்றி. வா, சாப்பிடலாம்!” என்றது. ஆற்றுக்கு அடியில் இருக்கும் தன் வீட்டுக்கு அனான்சியை அழைத்தது.

அனான்சியால் இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. கோசோவின் சமையலின் கைப்பக்குவத்தை ருசிப்பதற்காக உடனடியாக ஆற்றில் குதித்தது. ஆனால், அய்யோ பாவம்! அனான்சியால் ஆற்றுக்குள்ளே நீந்திச் செல்ல முடியவில்லை. அதனால் நீரின் மேலே மிதக்க மட்டுமே முடிந்தது. இதற்குள் வீட்டுக்குச் சென்ற கோசோ, உணவைத் தயாராக எடுத்து வைத்தது.



அனான்சி நீருக்குள் நீந்திச் செல்ல எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து. ஆனால், அதனால் முடியவில்லை. அனான்சிக்கு திடீரென்று ஒரு யோசனை வந்தது. அது தன்னுடைய ‘கோட்’ பாக்கெட்டில் கற்களை எடுத்து போட்டுக் கொண்டது. அனான்சியின் எடைக்கூடியதால் எளிதாக நீந்திச் சென்று கோசாவின் வீட்டை அடைந்தது.

அனான்சி கோசோ சாப்பாட்டு மேசையில் எடுத்து வைத்திருந்த சுவையான உணவைப் பார்த்தது. அது அவசர அவசரமாகச் சாப்பிடத் தயாரானது. “அனான்சி, சாப்பிடும் போது நாம் ‘கோட்’ அணிந்து கொண்டு சாப்பிட மாட்டோம். அது நம்முடைய வழக்கத்தில் கிடையாது. அதனால், ‘கோட்’டைக் கழட்டி வைத்து விட்டுச் சாப்பிட வா!'' என்றது.

அனான்சி கற்களைப் போட்டு வைத்திருந்த ‘கோட்’டைக் கழட்டியது. உடனே, ஆற்றின் மேலே மிதக்கத் தொடங்கியது.

அந்தச் சுவையான உணவை கோசோ ரசித்து சாப்பிடுவதை மேலேயிருந்து பார்த்தது அனான்சி. அது தன்னுடைய தவறுக்காக வருந்தியபடி சோகத்துடன் கரையேறியது

ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதை

- சித்ரா பலவேசம், திருநெல்வேலி

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/children/parable/p113.html


ISSN 2454 - 1990
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை






வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...



சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License