ஒரு சிப்பி இன்னொரு சிப்பியிடம் சொன்னது.
''ஐயோ, என்னால் வலி தாங்க முடியவில்லையே!''
இரண்டாவது சிப்பி காரணம் கேட்க முதல் சிப்பி, ''என்னுள் ஒரு கனமான உருண்டைப் பந்து ஒன்று சுழல்வது போல இருக்கிறது. அதனால் ரொம்பவலி'' என்றது.
இதைக் கேட்டதும் இரண்டாவது சிப்பிக்கு அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.
உடனே அது, ''நல்ல வேளை, எனக்கு அப்படி எந்த வலியும் ஏற்படவில்லை. நான் நலமுடன் உள்ளேன். இறைவனுக்கு நன்றி'' என்றது.
சிப்பி இரண்டும் பேசிக் கொண்டிருந்ததை ஒரு நண்டு கேட்டுக் கொண்டிருந்தது.
அது இரண்டாவது சிப்பியிடம், ''உனக்குத் தற்போது எந்த வலியும் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம். உன் நண்பனைச் சிரமப்படுத்தும் அந்த வலி, இன்னும் சில நாட்களில் ஒரு அழகான முத்தை உருவாக்கும். வலியைத் தாங்க விரும்பாத நீ, எப்போதும் இப்படி வெறுமையாகக் கிடக்க வேண்டியதுதான்'' என்றது.