ஒரு சிங்கம், ஒரு ஓநாய், ஒரு நரி என்று மூன்றும் கூட்டு சேர்ந்து வேட்டைக்குச் சென்றன.
அவைகளின் வேட்டையில் ஒரு கொழுத்த மான் கிடைத்தது.
சிங்கம் ஓநாயைக் கூப்பிட்டுஇ பங்கு பிரிக்கச் சொன்னது.
ஓநாய், அம்மானை மூணு சம பங்குகளாகப் பிரித்தது.
அதை பார்த்துக் கொண்டிருந்த சிங்கம், காட்டு ராஜாவான எனக்குச் சமமானவங்களா நீங்க, எனக்கென்று தனி மரியாதை இல்லையா? எனக்குச் சமமில்லாத உங்களுக்குச் சமமான பங்கா? என்று நினைத்துக் கொண்டு, பங்கு பிரித்த ஓநாயை ஒரு அறை அறைந்தது.
அறை வாங்கிய ஓநாய் மயக்கமாகிக் கீழே விழுந்தது.
சிங்கம், அடுத்து நரியைக் கூப்பிட்டு பங்கு பிரிக்கச் சொன்னது.
நரியும் பவ்யமா மானோட காது ஒன்றை மட்டும் தனக்கு எடுத்துக் கொண்டு, மீதமிருந்ததைச் சிங்கம் பக்கமாகத் தள்ளிவிட்டது.
சிங்கம் ஆச்சரியத்துடன், நரியே, எப்படி உனக்கு இவ்ளோ பவ்யமும் மரியாதையும் வந்தது? என்று கேட்டது.
நரி இன்னும் பணிவாக, “அதோ, அங்கே மயங்கிக் கிடக்கிற ஓநாய்கிட்டேக் கற்றுக் கொண்டேன்” என்றபடி அங்கிருந்து ஓடியது.
இதிலிருந்து என்ன தெரிகிறது? தகாத நட்பு கூடாது...!