மன்னர் ஒரு முறை கிராமங்களைச் சுற்றிப் பார்க்கக் குதிரையில் கிளம்பிச் சென்றார்.
அப்போது வயலில் ஒரே ஒரு பெண் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார்.
மன்னர் அவரிடம், ”மற்றவர்கள் எல்லாம் எங்கே?” என்று கேட்க, விசாரிப்பது மன்னர் என்பதை அறியாத அந்தப் பெண், ”அவர்கள் எல்லாம் மன்னரைப் பார்க்கப் போயிருக்கிறார்கள்” என்று சொன்னார்.
”அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் போகவில்லை?”என்று மன்னர் கேட்டார்.
அதற்கு அந்தப்பெண், ”மன்னரைப் பார்ப்பதற்காக ஒரு நாள் கூலியை இழக்கும் அளவிற்கு நான் முட்டாள் இல்லை. எனக்கு ஐந்து குழந்தைகள், அவர்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது. அதனால்தான் போகவில்லை” என்றார்.
மன்னர் அவரது கையில் சில தங்க நாணயங்களைக் கொடுத்துவிட்டு, ”உங்களது ஊர்க்காரர்களிடம் சொல்லுங்கள், நீங்கள் எல்லாம் மன்னரைப் பார்க்கச் சென்றீர்கள். ஆனால், மன்னரோ என்னைப் பார்க்க வந்தார் என்று...” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
எதையும் தேடிச் செல்லாதே... தகுதி இருந்தால் எல்லாம் உன்னைத் தேடி வரும்.