ஒரு பதினைந்து வயது சிறுவன், கடையில் ரொட்டி திருடும் போது பிடிபட்டான்.
நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டான்.
அப்போது நீதிபதி குற்றத்தை விசாரித்து, அந்தச் சிறுவனிடம், “உண்மையில் நீங்கள் ஏதாவது ரொட்டி மற்றும் பாலாடைக்கட்டி திருடினீர்களா?”* என்று கேட்டார்.
சிறுவன் கீழே பார்த்தபடி, "ஆம்" என்றான்.
நீதிபதி : ஏன்?
பையன் : எனக்கு அது தேவைப்பட்டது.
நீதிபதி : நீங்கள் வாங்கியிருக்க முடியாதா?
பையன் : பணம் இல்லை.
நீதிபதி : குடும்பத்திடம் இருந்து பெற்றுக் கொண்டிருக்கலாமே.
பையன் : வீட்டில் நோய்வாய்ப்பட்ட மற்றும் வேலையில்லாத அம்மா மட்டும்தான் இருக்கிறார்கள். அவர்களிடம் பணமில்லை.
நீதிபதி : நீங்கள் எதுவும் செய்யவில்லையா?
பையன் : கார் கழுவும் தொழிலைச் செய்து வந்தேன். என் அம்மாவைக் கவனித்துக் கொள்ள, ஒரு நாள் விடுமுறை எடுத்த போது, நான் வேலையிலிருந்து நீக்கப்பட்டேன்.
நீதிபதி : நீங்கள் யாரிடமும் உதவி கேட்கவில்லையா?
சிறுவன் : காலையிலிருந்து வீட்டை விட்டு வெளியேறி, சுமார் ஐம்பது பேரிடம் சென்றேன், ஆனால் உதவி இல்லை; எனவே, இந்தத் திருட்டைச் செய்ய வேண்டியதாகிவிட்டது.
வாதங்கள் முடிந்ததும், நீதிபதி தீர்ப்பைச் சொல்லத் தொடங்கினார்.
"திருட்டுக் குற்றம் இது. குறிப்பாகப் பசியுள்ள சிறுவன் ரொட்டி திருடுவது மிகவும் வெட்கக்கேடான குற்றமாகும், இந்த குற்றத்திற்கு அவன் மட்டும் காரணமில்லை” என்றபடி நீதிமன்றத்திலுள்ள அனைவரையும் பார்த்தார். பின்னர் அவர் தொடர்ந்து, “நான் உட்பட இந்நீதிமன்றத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் குற்றவாளிகள், எனவே இங்கு இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் தலா பத்து டாலர்கள் அபராதம். பத்து டாலர் கொடுக்காமல் யாரும் இங்கிருந்து வெளியேற முடியாது” என்றார்.
பின்னர் அவர், தனது பையிலிருந்து பத்து டாலரை எடுத்து மேசை மீது வைத்து, பேனாவை எடுத்து அதன்படி பெயரை எழுதத் தொடங்கினார்.
‘மேலும், பசித்த குழந்தையைப் போலீசிடம் ஒப்படைத்ததற்காக, அந்தக் கடைக்கு ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கிறேன். 24 மணி நேரத்திற்குள் அபராதத் தொகையைச் செய்யாவிட்டால், கடையை மூட நீதிமன்றம் உத்தரவிடும். மேலும், பட்டினி கிடக்கும் சிறுவனிடம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததற்காக காவல்துறைக்கும் அதே ஆயிரம் டாலர் தொகை அபராதமாக விதிக்கப்படுகிறது. இந்தச் சிறுவனுக்கு அபராதத் தொகை முழுவதையும் கொடுத்து, அந்தச் சிறுவனிடம் நீதிமன்றம் மன்னிப்பு கேட்கிறது” என்றார்.
தீர்ப்பைக் கேட்டதும், நீதிமன்றத்தில் இருந்தவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.
அந்தச் சிறுவனின் கைவிலங்குகள் அவிழ்க்கப்பட்டன. கண்ணீரை மறைத்துக் கொண்டு வெளியே வந்த நீதிபதியைச் சிறுவன் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தான்.
திருட்டு குற்றம்தான். ஒரு வேளை பசியைத் தீர்ப்பதற்காகச் செய்யப்பட்ட அந்தக் குற்றம் நடைபெறாமல் கவனிக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது என்பதுதான் இங்கு நீதி.