சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
வானை நோக்கித் துப்பாக்கி சுடப்பட்டு போட்டி தொடங்கியது.
நாய்கள் ஓட ஆரம்பித்தன. ஆனால், சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவேயில்லை.
போட்டியைப் பார்க்கக் கூடியிருந்த அனைத்து மக்களுக்கும் தாங்கமுடியாத ஆச்சரியம்.
என்ன நடந்தது.? சிறுத்தை ஏன் ஓடவில்லை? எனப் போட்டி அமைப்பாளரிடம் கேட்டார்கள்.
அதற்கு அவர் சொன்ன விடை என்ன தெரியுமா.?
“சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம். சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்காக மட்டுமேப் பயன்படுத்தும். அதன் வேகத்தையும், வலிமையையும், சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை... அப்படிச் செய்வது நமக்குத்தான் கால, நேர, ஆற்றல், பொருள் விரயம். தேவை இல்லாதவர்களிடமும், தகுதி இல்லாதவர்களிடமும் நாம் யார்? என்பதை நிரூபிக்காமல் இருப்பதேச் சிறந்தப் புத்திசாலித்தனம்”