புத்தர் வருகிறார் என்று கேள்விப்பட்ட சுத்தோதனர் பட்டத்து யானையை அழகு செய்து முழுப்படையுடன் புத்தரை வரவேற்கக் காத்திருந்தார்.
ஆனால், அந்த வழியை விட்டு வேறு சிறிய சந்துகள் வழியாக புத்தர் உள்ளே நுழைந்தார்.
மற்ற பிட்சுக்களை வேறு தெருக்களுக்கு அனுப்பிவிட்டு, தான் வேறு உருவத்தில் தந்தையிடமே பிச்சைக்குச் சென்றார்.
சுத்தோதனருக்கு அவரைத் தெரியவில்லை. ஆனால், யசோதரை புத்தரை அடையாளம் கண்டு தன் மகனைத் தந்தையை வணங்கும்படி செய்தாள்; தானும் புத்தரை வணங்கினாள்.
"சுத்தோதனர் தன் மகனை இந்த பிச்சைக் கோலத்தில் எதிர்பார்க்கவே இல்லை. அவர் கோபத்துடன், 'வெட்கக்கேடு! இது என்ன உடை? இவ்வளவு பெரிய செல்வந்தர் இவ்வாறு வரலாமா? போதும்' என்று கடிந்து கொண்டார்.
சினத்தோடு புத்தரை நோக்கினார்.
'தந்தைக்கு இன்னும் அறியாமை நீங்கவில்லையே!' என்று புத்தர் அவரை மேலும் கருணையோடு நோக்கினார்.
புத்தரின் கருணை மிக்க பார்வை சுத்தோதனரை வென்றது.
சுத்தோதனர் தோற்றுப் போனார். தந்தை மகனின் காலில் விழுந்து பிட்சுவானார்.
உறுதியுடையவனுக்கே உறுதியின் வலிமை புரியும்.