“எப்பொழுதும் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பதால் ஏதேனும் நன்மை உண்டா?'' என்று மாணவர்கள் ஆசிரியரைக் கேட்டனர்.
"நீங்களேதான் முடிவுக்கு வர வேண்டும். இரவு முழுதும் ஓயாமல் "க்ரக் க்ரக்' என்று கத்திக் கொண்டிருக்கும் தவளையையும் ஓசை எழுப்பிக் கொண்டிருக்கும் வண்டுகளையும் பாருங்கள். இவற்றின் பேச்சால் நமக்குத் தொல்லையே தவிர நன்மை உண்டா, சொல்லுங்கள்'' என்று கேட்டார். ஆசிரியர்.
''தொல்லைதான் ஐயா'' என்றார்கள் மாணவர்கள்.
''அதே வேளையில், காலம் தவறாமல் அதிகாலையில் நம் எல்லோரையும் எழுப்பிவிடும் சேவலின் குரலைப் பாருங்கள். அதன் குரல் கேட்டதும் உலகமே விழித்துக் கொள்கிறது. எல்லோரும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்குகின்றனர். சேவலும் ஓயாமல் குரலெழுப்புவதில்லை இதிலிருந்து என்ன தெரிகிறது?'' என்று மீண்டும் வினவினார் ஆசிரியர்.
''காலமறிந்து பேசினால், காலமறிந்து செயல் செய்தால், எல்லோருக்கும் நன்மை விளையும் என்று புரிகிறது'' என்றார்கள் மாணவர்கள்.