சீனத் தத்துவ ஞானி கன்பூசியஸிடம், அவரது சீடன் ஒருவன், "குருவே! உயர்ந்த மனிதனுக்கும், தாழ்ந்த மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?'' என்று கேட்டான்.
கன்ஃபூசியஸ் சொன்னார்:
"அன்பனே! உயர்ந்த மனிதன் தன் ஆத்மாவை நேசிக்கிறான். தாழ்ந்த மனிதன் தன் சொத்தை நேசிக்கிறான்! உயர்ந்த மனிதன் தனது தவறுகளுக்காக எப்படித் தண்டிக்கப்பட்டோம் என்பதை நினைவில் வைத்திருக்கிறான். தாழ்ந்த மனிதன் தான் பெற்ற வெகு மானங்களையே நினைவில் வைத்திருக்கிறான். 'உயர்ந்த மனிதன் தன்னையே பழித்துக் கொள்கிறான். தாழ்ந்த மனிதன் பிறரையே பழித்துக் கொண்டிருக்கின்றான். இதுதான் வித்தியாசம்!" என்றார்.
உயர்ந்தவன் என்பதும் தாழ்ந்தவன் என்பதும் எண்ணங்களிலேயே பிறக்கின்றன.