பட்டத்திற்கு வந்த கர்வம்!
பட்டம் ஒன்று வானத்தில் பறந்து கொண்டிருந்தது.
மிக உயரத்தில் பறந்ததால் அதற்கு கர்வம் உண்டாயிற்று. கீழே இருந்த பூக்களின் மீது பறந்து கொண்டிருந்த வண்ணத்துப் பூச்சியைப் பார்த்து, “இத்தனைச் சிறிதாகக் கீழேப் பறந்து கொண்டிருக்கிறாயே... என்னைப் பார்த்தாயா? நான் வானத்தைத் தொடுமளவுக்கு மேலே பறந்து கொண்டிருக்கிறேன்' என்று பெருமை பேசியது.
வண்ணத்துப் பூச்சி உடனே, “நான் என் விருப்பப்படி பறக்கிறேன்... ஆனால், நீயோ அடிமையாய் நூலால் கட்டப்பட்டு ஒரு சிறுவனின் விருப்பத்திற்குக் கட்டுப்பட்டு பறந்து கொண்டிருக்கிறாய். சிறைப்பட்டிருக்கும் உன்னை விட, சுதந்திரமாய்ப் பறக்கும் என் நிலை எவ்வளவோ மேல்" என்றது.
- கணேஷ் அரவிந்த்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.