கணக்குப் பாடத்தில் ஆர்வம்!
கணக்குப் பாடத்தில் பலவீனமாக இருந்த தன் மகனை அடுத்த ஆண்டில் அருகிலிருந்த கிறித்தவப் பள்ளி ஒன்றில் கொண்டு போய்ச் சேர்த்தார் அவனின் தந்தை.
அங்கு சேர்ந்ததிலிருந்து தினமும் வீட்டுக் கணக்குகளை வந்த உடன் செய்தான்.
யாருடைய தலையீடுமில்லாமல் கணக்குகளைப் போட்டான்.
அடுத்து வந்த தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான். அவனுடைய ஆர்வத்தைக் கண்டு வியந்த அவனது தந்தை அவனிடம், “உனக்குக் கணக்கில் எப்படி இவ்வளவு ஆர்வம் வந்தது?” என்று கேட்டார்.
அவன் உடல் நடுங்கியபடி, “ஆர்வமெல்லாம் ஒன்றுமில்லை... எங்கள் பள்ளியில் கணக்கில் தப்புப் பண்ணிய ஒரு மாணவனைக் கூட்டல் குறியில் வைத்து ஆனியால் அடித்துப் பள்ளிக்குள் நுழையும் இடத்தில் வைத்திருக்கிறார்களே... அதை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கேட்டான்.
தந்தைக்குப் புரிந்தது. உங்களுக்கு...?
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.