ஒரு நாள் மாலை குருடன் தனது நண்பனுடைய வீட்டிற்கு சென்று பேசிக் கொண்டிருந்தான்.
வெகு நேரம் சுவாரசியமாக உரையாடி விட்டுக் கிளம்பும் போது இருட்டி விட்டது.
தன்னுடைய தோழனிடம் "நண்பா, தயவு செய்து உன்னுடைய சிம்னி விளக்கினை எடுத்துக் கொண்டு செல்லட்டுமா?" என்று கேட்டான்.
"உனக்கு எதற்கு சிம்னி விளக்கு?" என்று கேட்ட நண்பன், மேலும் தொடர்ந்து "அந்த விளக்கினைக் கொண்டு செல்வதால் மட்டும் உனக்கு வழி நன்றாக தெரிந்து விடப் போவதில்லை" என்று அவனது மனதில் தோன்றியதைக் கூறினான்.
"இல்லை, அது எனக்காக இல்லை, மற்றவர்கள் என்னை நன்றாகப் பார்ப்பதற்காக, தேவையில்லாமல் என் மேல் மோதி விடாமல் இருப்பதற்கு" என்று கண் தெரியாத நண்பன் பதில் கூறினான்.
குருடனுடைய நண்பனும் ஒரு சிம்னி விளக்கினை எடுத்துத் திரிக்கு நெருப்பூட்டி ஒளி ஏற்றிக் கொடுத்தான். கொஞ்ச தூரம் நடந்து சென்று கொண்டிருந்த குருடனின் மேல் வந்து மோதினான் ஒரு வழிப்போக்கன்.
குருடனுக்கு வந்ததே கோபம், "ஏனய்யா?. ஏன் பார்த்து வர வேண்டியது தானே? எனக்குத்தான் கண் தெரியவில்லை... சிம்னி விளக்கு உன் கண்களுக்கு தெரிய வில்லையா?" என்று ஆத்திரம் பொங்க அடித் தொண்டையிலிருந்து கேட்டான்.
வழிப்போக்கன் "நீ பார்த்து வர வேண்டியதுதானே?" என்றான்.
உண்மையில் இங்கு யார் குருடன்?