வேடம் போட்டு ஏமாற்றலாமா?
ஒரு புறாக் கூட்டில் புறாக்கள் ஆனந்தமாய் உண்டு களித்திருப்பதை ஒரு காகம் பார்த்தது.
தானும் அந்தப் புறாக்களோடு சேர்ந்து வாழ விரும்பியது. எப்படி அந்தப் புறாக்களுடன் சேரலாம் என்று யோசனை செய்தது. முடிவாகத் தன் சிறகுகளுக்கு வெள்ளை நிற வர்ணம் பூசியது.ஒரு நாள் இரவில் புறாக்கூண்டில் தெரியாமல் உள்ளே நுழைந்தது.
அது வாயைத் திறக்காமல் இருந்த வரையில் அதை யாரும் கவனிக்கவில்லை. நன்றாக உண்டு களித்தது. வரவர அதற்குத் தைரியம் அதிகமாயிற்று. தைரியமும் களிப்பும் சேர்ந்து கொள்ளவே தன் அதிர்ஷ்டத்தை நினைத்து ஒருநாள் பலமாய்ச் சிரித்தது. அதனால் அதன் குரல் வெளிப்பட்டது.
அது யார் என்பதை மற்ற புறாக்கள் தெரிந்து கொண்டு அதை வெளியே அடித்துத் துரத்தின. காகம் அடிபட்டுத் தன் இனத்தினர் வசித்த பகுதிக்குத் திரும்பியது.
அதன் வெள்ளை நிறத்தையும் அடிபட்ட கோலத்தையும் மற்ற காகங்கள் பார்த்தன. அதன் தந்திர செயலை உணர்ந்து தங்களோடு சேர்த்துக் கொள்ள அவை மறுத்துவிட்டன.
கடைசியில் அந்தக் காகம் தனித்து விடப்பட்டது.
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.