ஆசிரியருக்கு அறிவூட்டிய குழந்தை!
ஒரு பள்ளி ஆசிரியர் வண்ணப் புத்தகத்தில் யானையின் படத்தை வரைந்து கொண்டு வந்து, அதைக் காண்பித்து, “இது என்ன?” என்று மாணவர்களைக் கேட்டார்.
சின்னக் குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியாக, “யானை!”, “யானை!” என்றார்கள்.
அவர்களைப் பாராட்டி விட்டு அடுத்த வகுப்பை நோக்கிச் சென்றார் அந்த ஆசிரியர்.
அங்கும் அந்த யானையின் படத்தைக் காண்பித்து “இது என்ன?” என்று கேட்டார்.
அங்கும் பல குழந்தைகள் “யானை” என்று குரலெழுப்பின.
அங்கிருந்த ஒரு சின்ன குழந்தை எழுந்து, “ஐயா, அது யானை அல்ல... அது யானையின் படம்” என்றது.
அந்தக் குழந்தையின் அறிவு ஆசிரியரின் அறியாமையை அவருக்கு உணர்த்துவதாக இருந்தது.
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.