எந்த வழி சிறந்தது?
நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்குப் பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு எத்தனை தந்திரங்கள் தெரியும்?”
“எனக்கு ஒரே ஒரு தந்திரம்தான் தெரியும்.” என்றது பூனை.
அப்போது பெரிதாகச் சப்தம் ஒன்று கேட்டது.
ஓநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை உடனே அங்கிருந்த மரத்தில் பாய்ந்து உச்சியில் ஏறிக்கொண்டது.
நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன்படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகியதால் எதிரி விலங்குகளிடம் மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.
சந்தேகத்துக்குரிய நூறு வழிகளை விட பாதுகாப்பான ஒரு வழியே சிறந்தது..
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.