வாழ்க்கை குறித்த பழமொழிகள்
இளந்தளிர்களும் உதிர்ந்த சருகுகளும் எங்குமே காணப் பெறுகின்றன.
- இந்தியா
சில சமயம் மூழ்குதல், சில சமயம் மேலெழுதல், இது தான் வாழ்க்கை.
- இந்தியா
வாழ்க்கை காற்றின் நடுவிலுள்ள ஒரு தீபம்.
- ஜப்பான்
வாழ்க்கை என்பது அன்பும் மனைவியும்.
- ஜப்பான்
உணவுக்காகவும் உடைக்காகவுமே நாம் இரண்டு கால்களாலும் ஓடித் திரிகிறோம்.
- சீனா
வாழ்க்கை இரு பகுதிகளுள்ளது: ஒன்று கழிந்தகாலம் என்ற கனவு, மற்றது வருங்காலம் என்ற விருப்பம்.
- அரேபியா
வாழ்க்கை ஒரு வெங்காயம், அதை உரிக்கும் பொழுது கண்ணீர் வரும்.
- பிரான்ஸ்
வாழ்க்கை என்னவென்று நாம் தெரிந்து கொள்ளும் முன், பாதி வாழ்க்கை கழிந்து விடுகின்றது.
- பிரான்ஸ்
மரணத்தைப் பற்றிச் சிந்திப்பவன் வாழத் தொடங்குகிறான்.
- ஜெர்மனி
வாழ்க்கை நமக்கே அளிக்க பெற்றதன்று, இரவலாக வந்தது.
- ஜெர்மனி
இருபது வருடம் வளர்ச்சி, இருபது வருடம் மலர்ச்சி, இருபது வருடம் ஒரே நிலை, இருபது வருடம் வாடுதல்.
- பெல்ஜியம்
நாம் அழுதுகொண்டே பிறக்கிறோம், குறை சொல்லிக் கொண்டே வாழ்கிறோம், ஏமாற்றமடைந்து இறக்கிறோம்.
- இங்கிலாந்து
வாழ்க்கை வாழ்வதிலில்லை, நம் விருப்பத்திலிருக்கிறது.
- இங்கிலாந்து
வாழ்க்கை வேண்டுமானால், நாட்களை விலை கொடுத்து வாங்க வேண்டும்.
- பல்கேரியா
பிறக்கும் பொழுது அழுது கொண்டு வந்தோம், போகும் பொழுதாவது சிரித்துக் கொண்டு செல்லும்படி வாழ வேண்டும்.
- எஸ்டோனியா
வாழ்க்கை என்பது அடித்தல், அல்லது அடிபடுதல்.
- ரஷ்யா
செத்துக் கிடக்கும் சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல்.
- ரஷ்யா
மனிதனின் வாழ்க்கை ஒரு குழந்தையின் கையிலுள்ள முட்டை போன்றது.
- ருமேனியா
சிறந்த வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், பழக்கம் அதை இன்பமாக்கும்.
- கிரீஸ்
வாழ்க்கை ஒரு மேடை, உங்கள் பாகத்தை, நடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
- கிரீஸ்
நல்லதோ, கெட்டதோ நாம் அனைவரும் வாழத்தான் வேண்டும்.
- இத்தாலி
நன்றாக வாழ்வதற்குச் சொற்ப வாழ்வேப் போதுமானது.
- லத்தீன்
மரணம் வரும் வரையில் எல்லாம் வாழ்க்கைதான்.
- ஸ்பெயின்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.