* கற்காதவன் அறியாதவன் (Learn not and know not)
* கல்வியால் பரவும் நாகரிகம் (Education is the transmission of civilization)
* கல் மனம் போல் பொல்லாப்பில்லை, கற்ற மனம் போல் நற்பேறில்லை (Nothing so much worth as a mind well educated)
* கல்வியே நாட்டின் முதன் அரண் (Education is the chief defense of a nation)
* ஐயமே அறிவின் திறவுகோல் (Doubt is the key of knowledge)
* கற்பதற்கு வயது ஏதுமில்லை (Never too late to learn)
* கற்கையில் கசப்பு கற்ற பின் இனிப்பு (Knowledge has bitter roots but sweet fruits)
* தீய பண்பைத் திருத்திடும் கல்வி. நல்ல பண்பை பொலிவுறச் செய்யும் (Education polishes good nature and corrects bad ones)
* அறிவு ஒரு சுமை அன்று (Knowledge is no burden)
* அறிவு தன் விலை அறியும் (Knowledge finds its price)
* அறிவே நன் மனிதனை தொடங்கி வைக்கிறது.. ஆனால் அதுவே அவனை முழுமை அடைவிக்கிறது (Knowledge begins a gentleman but it is knowledge that completes him)
* ஒழுங்குபடுத்தப்பட்ட அறிவே விஞ்ஞானம் (Science is organized knowledge)
* அறிவில்லாத ஆர்வம் சுடரில்லாத நெருப்பு (Zeal without knowledge is fire without light)
* கலையும் அறிவும் தரும் உணவும் மதிப்பும் (Art and knowledge bring bread and honor)
* அறிவே ஆற்றல் (knowledge is power)
* அறிவு வருகிறது ஆனால் ஞானம் நீடித்து நிற்கிறது (Knowledge comes but wisdom lingers)
* அனுபவமில்லாத அறிவு அரை கலைஞனை உருவாக்கும் (Knowledge without practice makes but half an artist)
* அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும் (A little learning is a dangerous thing)
* நம்மை அறிவதே நமக்கு அறிவாகும் (All our knowledge is ourselves to know)
* அறிவைப் பெருக்குபவன் துயரத்தை பெருக்குவான் (He who increases knowledge increases sorrow)
* மறைந்துள்ள அறிவுக்கும் அறியாமைக்கு வேற்றுமை இல்லை (Hidden knowledge differs little from ignorance)