பயம் ஏற்படுத்துவதும் போக்குவதும் யார்?
சத்தியத்திற்கும் நேர்மைக்கும் உயர்வான மதமே இல்லை.
- மகாத்மா காந்தி
தனித்து நம்மால் செயல்பட முடியாததற்குக் காரணம் வலிமையற்ற மனம்தான்.
- ஸ்ரீ ரமண மகரிஷி
அச்சம் இருக்கும் வரை நீ அறிவாளியாக மாட்டாய்.
– பாரதியார்
பிறர் விடுதலையை மறுப்பவர்கள், தான் அதற்கு உரியவராகார்.
- ஆபிரகாம் லிங்கன்
கருணையில்தான் ஒரு மதத்தின் ஆணிவேரே அடங்கியிருக்கிறது.
- ஒளவையார்
உணவு உடையும் உறைவிடமும் நமது நிழல் போன்றவை. அவற்றின் பின்னால் நாம் செல்லக்கூடாது. நம் பின்னால் அவை வரவேண்டும்.
- இயேசுநாதர்
தன்னைச் சரிபடுத்திக் கொள்பவனே, உலகைச் சரிபடுத்த தகுதியானவன்.
- விவேகானந்தர்
அறியாமல் பிழை செய்தவரைப் பொறுத்துக் கொள்வதே வீரமாகும்.
- திருவள்ளுவர்
சொர்க்கம் தாயின் இரு பாதங்களுக்கு அடியில் இருக்கிறது.
- நபிகள் நாயகம்
பிறருக்காக வாழும் பொதுநலப் பண்பு மனிதனுக்கு ஒரு நலமாகும்.
- அரவிந்தர்
மூடனைப் பிறர் அழிக்க வேண்டியதில்லை. அவன் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறான்.
- புத்தர்
பயமும் தயக்கமும் உள்ளவனைத் தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
- சாணக்கியர்
மௌனமாகத் தியானம் செய்தால் மனம் கலங்காத நிலைபெறும்.
- மகாவீரர்
பயத்தை ஏற்படுத்துவதும், பயத்தைப் போக்குபவனும் இறைவனே.
- விஷ்ணு சகஸ்ரநாமம்
ஒருவனின் தன்னம்பிக்கையும் ஒழுக்கமும் அவனது அதிர்ஷ்டத்தைத் தீர்மானிக்கின்றன.
- சைரஸ்
மேகத்தைக் காற்று கலைப்பதைப் போல ஆண்டவன் நாமம் உலகப்பற்றாகிய மேகத்தைக் கலைத்துவிடும்.
- அன்னை சாரதாதேவி
நாம் உயிர்களிடம் அளவு கடந்த கருணை வைத்தாலன்றி நாம் கடவுளின் கருணையை பெற முடியாது.
- கிருபானந்த வாரியார்
கறந்த பாலில் மறைந்து உறையும் நெய் போல, பரமாத்மா ஒவ்வொரு ஜீவனிடத்தும் வாழ்கிறான்.
- உபநிஷதம்
ஆத்திகன் மனிதனாக வாழ்ந்து தெய்வமாகச் சாகிறான்.
- கண்ணதாசன்
உழைப்பும், நம்பிக்கையும் சேருமிடத்தில் ஏழ்மையிருக்காது.
- நன்மொழி
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.