* தாய்மொழி வழிக் கல்வி சிந்தனையைத் தூண்டி வளர்க்கும்.
* கல்வியறிவில் கேள்வியறிவு உயர்ந்தது; கேள்வியறிவிலும் பட்டறிவு உயர்ந்தது.
* தொண்டும், துணிவும் இடைவிடா முயற்சியும் கடின உழைப்பும் தேவை.
* தன்னம்பிக்கை ஒன்றைத் தவிர வேறு எதுவும் துணையில்லை.
* சிக்கல்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணாவிட்டால் புதிய சிக்கல்கள் தோன்றும்.
* திட்டமிட்டுச் செய்யாத பணிகளில் பணமும் பாழாகிறது. பயனும் இல்லாமல் போகிறது.
* அரைகுறைகள் மற்றவர்கள் சொல்வதை மதித்துக் கேட்க மாட்டார்கள்.
* சலுகைகளால் ஒரு சமுதாயத்தை வளர்த்து விட முடியாது.
* ஓய்வு எடுக்காது உழைக்கும் உழைப்பின் தரம் குறையும்.
* தவறுகளைக் கூட ஏற்கலாம். ஆனால் முறைகேடுகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது.
* மனித முயற்சிகள் தோற்கலாம். ஆனால், மனிதன், தோற்கக் கூடாது.
* பெண் தனித்திருக்க முடியாது என்ற கருத்து பிழையானது.
* எல்லோரையும் திருப்திப்படுத்த முயல்கிறவன் பைத்தியக்காரனாகி விடுவான்.
* விரோதிகளை விட வஞ்சகர்கள் மோசமானவர்கள்.
* திட்டமிடாத வாழ்வு, காட்டாற்று வெள்ளம் போன்றது.
* பதவியைப் போல மனிதனைக் கெடுப்பது வேறு ஒன்றும் இல்லை.
* செய்யச் சொல்வதைவிட செய்வது எளிது.
* அப்பாவிகளாக இருப்பதும் ஆபத்தே.
* தாய்மொழிக் கல்வி, கற்ற அறிவைப் பன்மடங்கு விரிவாக்கும்.
* அகந்தை அறிவை மயக்கும்; அடக்கம் அறிவை விரிவாக்கும்.
* பயமும் சமூகத் தீமையே.
* பொதுமையில் உருவாகும் நன்மைக்கு ஈடு இல்லை.
* அறிவார்ந்த அன்பே, வாழ்க்கைக்குப் பயன்படும்.
* மனிதனை, மனிதனாக மதிப்பது ஒழுக்கம்.
* ஒருமைப்பாடு அமையாத நாட்டில் வளமான வாழ்க்கை அமையாது.