
மிகவும் மரியாதைக்குரியவர் அன்னையே; மிகவும் கசப்பானது தனிமையே; மிகவும் துயரமானது மரணமே.
- வில்ப்ரெட் பங்க்

நீ மேன்மையடைய விரும்பினால் உன் தாய் தந்தையர்கள் சொல்கேட்டு நடப்பதுடன் அவர்களையும் காப்பாற்ற வேண்டும்.
- திருவள்ளுவர்

உலகம் அனைத்தையும் ஒரு தட்டிலும், என் தாயை மறு தட்டிலும் வைத்து நிறுததால், உலகின் தட்டுத்தான் மேலேயிருக்கும்.
- லாங்டேல் பிரபு

அன்னையின் இதயமே குழந்தையின் பள்ளிக்கூடம்.
- பீச்சர்

தாயின் நற்குணங்களும், தந்தையின் பாவங்களும் குழந்தைக்கு வந்து சேரும் என்று எங்காவது எழுதி வைத்தல் நலம்.
- டிக்கன்ஸ்

குழந்தையின் எதிர்காலக் கதி எப்பொழுதும் தாயில் வேலையால் அமைகின்றது.
- நெப்போலியன்

சமூகத்தின் எதிர்காலம் தாய்மார்களின் கைகளில் இருக்கின்றது.
- டிபூஃபோர்ட்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.