பணத்தின் பலன் எதில் இருக்கிறது?

சிந்தனை இல்லாத படிப்பு, பயனில்லாத உழைப்பு, படிப்பில்லாத சிந்தனை இவை மூன்றும் ஆபத்தானவை.
– ஆண்டர்சன்

பிறர் குற்றங்களைக் காண முயல்பவன் அரை மனிதன்.
– வேட்லி

திறமை தானாக வராது; நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
– ஹேஸ்டர் பீல்

மனித வாழ்வு என்பது தாமரை இலையில் உருண்டோடும் பனித்துளி போன்றது.
– தாகூர்

உழைத்துப் போராடாமல் வெற்றியை அடைய முடியாது.
– தாமஸ்

படிப்பு என்ற மெழுகுவர்த்திக்கு ஆர்வமே திரி.
– யாரோ

சிந்திக்காமல் பேசத் தொடங்குவது, குறி பார்க்காமல் அம்பை விடுவது போன்றது.
– ஆஸ்கர் ஒயில்ட்

மனிதன் தோல்வியின் மூலமே மேலும் புத்திசாலி ஆகின்றான்.
– விவேகானந்தர்

நாம் படிக்கப் படிக்க நம்மிடமிருக்கும் அறியாமையை அறிந்து கொள்கிறோம்.
– ஷெல்லி

சிறிய தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் பெரிய தவறுகளைத் தவிர்க்க முடியாது.
– கன்ஃபூசியஸ்

அளவில்லாத ஆசை, நமது நல்ல குணங்களை அழித்து விடும்.
- மகாவீரர்

வாழ்க்கையை வளமாக்க விரும்பினால் காலத்தை வீணாக்காதே. காலத்தால் செய்யப்பட்டதே வாழ்க்கை.
– ரிச்சர்ட் சாண்டர்ஸ்

கடினமான வேலைகளைச் செய்வதில் மகிழ்ச்சியடைபவர்களே எப்போதும் புகழ் பெறுகிறார்கள்.
– மகாகவி மில்டன்

உண்மை ஊடுருவும் சூரிய ஒளி போன்றது. அதை யாராலும் மூடி மறைக்க முடியாது.
– மில்டன்

தேவைப்படும் போது தன் முடிவை மாற்றிக் கொள்ளத் தெரிந்தவன்தான் அறிவாளி.
– டாக்டர் ஜான்சன்

உன்னிடமுள்ள திறமை எவ்வளவு சிறிதாக இருந்தாலும் பயன்படுத்தத் தயங்காதே. இனிய குரல் கொண்ட பறவைகள்தான் பாட வேண்டும் என்றால் காடு அமைதியாகி விடும்.
– ஹென்றி வேன்டேக்

நீ துயரப்படக் காரணம் எதுவாக இருந்தாலும் பிறருக்குத் துன்பம் செய்யாதே.
- ஜார்ஜ் எலியட்

அமைதியை விட மேலான மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை!
– அரவிந்தர்

கடந்ததைப் பற்றி வருந்தாதே! வருவதைப் பற்றி கற்பனை செய்யாதே!
– ஸ்ரீ அன்னை

பணத்தின் பலன் அனைத்தும் அது பயன்படுவதில்தான் இருக்கிறது.
– பெஞ்சமின் ஃபிராங்க்ளின்

வாழ்க்கை அனுபவமில்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது.
– பெர்னார்ட் ஷா
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.