நேரம் குறித்த பழமொழிகள்

காலம் கடவுளுடையது; நம்முடையதன்று.
– ஹாலந்து

காலத்தால் ஏற்பட்ட புண் காலத்தாலேயே ஆறும்.
– இங்கிலாந்து

உலகத்துச் செல்வங்களால், இழந்து போன ஒரு கணத்தைக்கூட திரும்பப் பெறமுடியாது.
- பிரான்ஸ்

காலம்தான் உலகின் ஆன்மா.
– கிரீஸ்

காலத்தை விலைக்கு வாங்க முடியாது.
– ஜெர்மனி

காலத்திற்காகக் காத்திருக்கலாம். காலம் யாருக்காகவும் காத்திருக்காது.
– இங்கிலாந்து

நிகழ்காலத்தை நாம் இழப்பதால் நாம் எல்லா காலத்தையும் இழக்கிறோம்.
– இங்கிலாந்து

காலம் ஓசையில்லாத அரம்.
– இத்தாலி

பல்லுள்ள போதேத் தேங்காயைத் தின்ன வேண்டும்.
– இலங்கை

இரவும் பகலும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.
– ஜப்பான்

மழை பெய்யுமுன்பே நீர் பிடிப்புக்கு ஏற்பாடு செய்.
– துருக்கி

பணத்தை இழந்தால் சொற்ப நஷ்டம்; நேரத்தை இழந்தால் எல்லாம் நஷ்டம்.
- ஆர்மீனியா

எல்லாத் துயரங்களுக்கும் இரண்டு பரிகாரங்கள் உண்டு. அவை காலமும் மெளனமும்.
- பிரான்ஸ்

ஒவ்வொருவனும் தன் குற்றத்தைக் காலத்தின்மேல் சுமத்துகிறான்.
– இங்கிலாந்து

காலத்தைத் தவறவிட்டால் வாழ்வு சுமையாகிவிடும்.
– இந்தியா

நேரம் சொக்கத்தங்கம்.
– எஸ்டோனியா
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.