உழைப்பு குறித்த உலகப் பழமொழிகள்

உழைப்பே ஓய்வுக்குத் திறவுகோல்.
- இந்தியா

கழுதைபோல் உழைக்க வேண்டும்; பின்பு மனிதனைப் போல் உண்ண வேண்டும்.
- இந்தியா

அடிமை போல் உழைப்பவன் அரசனைப் போல் உண்கிறான். உறங்குகின்ற சிங்கத்தை விட அலைகின்ற நரி மேலானது.
- துருக்கி

காட்டுப் பறவைக்கு உணவில்லை என்றால், உலகம் முழுவதும் அதற்குத் திறந்து கிடக்கின்றது.
- சீனா

ஈச்சம் பழத்தைக் கொட்டையுடன் விழுங்க முடியாது.
- சீனா

அவசரக் காலத்தின் தேவைக்கு ஒய்வு நேரத்தில் தேடி வை.
- சீனா

மத்தளமாய்ப் பிறந்தால் சாகும்வரை அடிதான்.
- ஜெர்மனி

அடுப்பு ஊதுபவன் கண்களில் பொறிகள் படத்தான் செய்யும்.
- ஜெர்மனி

உழைப்பு கல்லிலிருந்து ரொட்டியை உண்டாக்கும்.
- ஜெர்மனி

துடைப்பக்கட்டை தேய்ந்து போனால், அது செய்து வந்த வேலை துலக்கமாய்த் தெரியும்.
- ஜெர்மனி

வீட்டில் ஒரு பணியாளனே உண்டு, அவன் பெயர் யஜமானன்.
- ஜெர்மனி

நனையாத கால்சட்டைகளுக்கு உண்ண மீன் கிடைக்காது.
- பல்கேரியா

நடந்தால் ஏதாவது கிடைக்கும்,அமர்ந்தால் ஒன்றுமில்லை.
- பல்கேரியா

வண்டியிலே மூட்டைகளை ஏற்றுவதை விடக் கீழேத் தள்ளுவது எளிது.
- ஸெக்

மாரிக்காலம் வந்தால், உன்னிடம் ஒரு கேள்வி கேட்கும், கோடை முழுவதும் நீ என்ன செய்து கொண்டிருந்தாய் ?
- ஸெக்

கையில் அழுக்கு அதிகமானல், ரொட்டியின் வெண்மை அதிகரிக்கும்.
- எஸ்டோனியா

பச்சை மரத்தையே வெட்ட வேண்டியிருக்கும், உளுத்த மரம் தானகச் சாயும்.
- எஸ்டோனியா

உழைப்புதான் வாழ்க்கை என்று உணர்ந்து வேலை செய். அதன் கால்பட்ட் இடமெல்லாம் ரோஜாச் செடிகள் முளைக்கின்றன.
- லத்தின்

கழுதை போல் உழைத்தவன் கனவானைப்போல் உண்பான். கனவானைப் போல் உழைத்தவன் கழுதை போல் உண்பான்.
- லத்தின்

திராட்சைத் தோட்டத்திற்குத் தேவை ஒரு மண்வெட்டி, பிரார்த்தனையன்று.
- ஆர்மீனியா

உழவே தேவையில்லாத எந்த இடத்திற்கு நீ போக முடியும்.
- ஸ்பெயின்

முத்துமாலை அணிபவர்களுக்கு முத்துச் சிப்பிக்காகக் குதித்தவனை எத்தனை முறை மீன்கள் கடித்தன என்று தெரியாது.
- ஆப்பிரிக்கா

வியர்வையைச் சிந்து, நீ நன்கு வாழ்வாய். மனிதன் உழைக்கிருன். கடவுள் வாழ்த்துகிறார்.
- அமெரிக்கா

வெளியேப் போன கால், எப்பொழுதும் ஏதாவது கொண்டு வரும்.
- ஸ்காட்லந்து

உண்பதைத் திரும்ப நிரப்பிவிட வேண்டும். (உழைப்பினல் தான் நிரப்ப முடியும். )
- எகிப்து

மனிதன் உழைக்கவேப் பிறந்தவன்.
- பழைய ஏற்பாடு

உழைக்கும் மனிதனின் உறக்கம் இனிமையானது.
- புதிய ஏற்பாடு

வயலில் முதலாளாகவும், படுக்கைக்குக் கடைசியாளாகவும் இரு.
- சீனா

செய்யும் வேலையை மாற்றிக் கொள்ளல் உழைப்புக்குப் பரிகாரம்.
- இங்கிலாந்து

உழைப்பவர்கள் ஏழைகளாயிருக்கிருர்கள்; ஏனெனில் அவர்கள் பெருந் தொகையினர்.
- இங்கிலாந்து

உழைப்பு மகிழ்ச்சிக்குத் தந்தையாகும்.
- பிரான்ஸ்

உழைத்தலே பிரார்த்தனை செய்தல்.
- லத்தீன்

உழைக்கவேப் பிறந்த நீ ஒய்வை ஏன் தேடுகிறாய்?
- லத்தீன்

உழைப்பிலிருக்கிறது வாழ்க்கை.
- ரஷ்யா

தனக்குரிய வேலையைக் கண்டு கொண்டவனேப் பாக்கியசாலி; அவன் வேறு பாக்கியத்தைக் கேட்க வேண்டியதில்லை.
- கார்லேல்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.