உண்மை குறித்து அறிஞர்கள்
 தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது ; யாவரும் கவனிக்கவில்லை எனில் உண்மை பொய் ஆகாது. பொது மக்கள் துணையின்றியும் உண்மை நிலைத்து நிற்கும். அது தன்னிலையுடையது.
- மகாத்மா காந்தி
 உள்ளம் தெளிவாக இருந்தால் வாக்கினில் உண்மை உண்டாகும்.
- பாரதியார்
 உங்களுக்கு நீங்களே உண்மையாக இருக்க முயலுங்கள்.
- சுவாமி சிவானந்தர்
 உண்மையை நாம் அறிவினால் மட்டும் காண்பதில்லை, அன்பினாலும் காண்கிறோம்.
- பாஸ்கல்
 உலோபியைப் போல், உள்ளம் நிறைந்த உண்மையும் ஒலைக் குடிசையிலேயே வாழ்கின்றது.
- வில்லியம் ஷேக்ஸ்பியர்
 உண்மையை நேசி. ஆனால், பிழையை மன்னித்து விடு.
- வோல்ட்டேர்
 உண்மை நாடவே நமக்கு உரிமை ஆண்டவனுக்கே அது உடைமையாகும்.
- மான்டெய்ன்
 உண்மையை அடைய விரும்பினால் உண்மைக்குரிய வழியில் சிறுகச் சிறுக முன்னேறிச் செல்க.
- டாலர்
மனிதன் பிறந்துள்ளது உண்மையைத் தேடவே. ஆனால் அதை அடையும் பாக்கியம் வேறொரு பெரிய சக்திக்கே உண்டு.
- மான்டெய்ன்
 உண்மையாக நடந்து கொள்ளும் மனிதனுக்கு எந்த உபதேசமும் தேவையில்லை.
- மகாவீரர்
 உண்மையைக் கண்டுபிடிப்பதே மனிதனுடைய மகோன்னதமான லட்சியம், உண்மையைத் தேடுவதே பரமோத்தமமான தொழில். அது அவனுடைய கடமையும் ஆகும்.
- எட்வர்ட் போப்ஸ்
 நம் பக்கம் உண்மையிருப்பது வேறு. நாம் உண்மையின் பக்கத்தில் இருக்க விரும்புவது வேறு.
- லிட்வா
 உண்மை உரைப்பதற்குச் சாத்தியமான ஒரே வழி கலைதான், அதுதான் கலையின் புகழும் நன்மையும் ஆகும்.
- ராபர்ட் பிரெளணிங்
 உண்மை மனிதனுக்குச் சொந்தம்; பிழை அவனுடைய காலத்துக்குச் சொந்தம்.
- கதே
 முரணில்லாதிருக்க முயல்க. உண்மையாயிருக்க மட்டுமே உழைத்திடுக.
- ஹோம்ஸ்
 உண்மையாக இருக்கத் துணிக. ஒன்றிற்கும் பொய் வேண்டியதில்லை. பொய்யை விரும்பும் குற்றம் அதனாலேயே இரண்டு குற்றமாய்விடும்.
- ஹெர்பர்ட்
 உண்மையை விரும்புபவன், அதை அறிந்தவனை விட சிறந்தவனாகிறான்; அதை விரும்புபவனை விட உண்மையில் மகிழ்ச்சி காண்பவன் உத்தமமான உயர்ந்த மனிதன் ஆகிறான்!
- கன்பூசியசு
 ஒவ்வொருவரும் உண்மையே சொல்லுவார்களானால் அந்த உண்மைக்குரிய மதிப்பே போய்விடும்!
- நிக்கோலோ மாக்கியவெல்லி
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|