அறிவைப் பற்றி அறிஞர்கள்

அறிவைப் பெற்றிருந்தால் அதை உபயோகிக்க வேண்டும், உனது அறியாமையை ஒப்புக்கொள்வது போல, அறிவை அடைந்திருந்தால் போதாது.
- கன்பூசியஸ்

அறிவுடைமைக்கு முதற்படி நாம் அறியாமையில் இருக் கிறோம் என்பதை உணர்தல்
- லெவிஸ்

முழுமையாகத் தெரிந்து கொள்ளாத விஷயம் நம் அறிவில் சேராது.
- கதே

என்னை விட அதிகமாய்த் தெரிந்துகொண்டுள்ள மனிதனிடம் நான் பொறாமை கொள்வதில்லை. ஆனால், என்னைவிடக் குறைவாகத் தெரிந்தவர்களிடம் இரக்கம் கொள்கிறேன்.
- கி. பர் டி. மிரெளன்

அறிவில் உண்மையான முன்னேற்றம் பெற விரும்புவோன் தன் முதுமையையும் இளமையையும் பின்னால் பெற்ற நன்மைகளையும், முன்னால் அடைந்த பலன்களையும் உண்மையின் பலிபீடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- க பெர்க்ஸ்

நாம் சொற்ப விஷயங்களைப்பற்றி மட்டும் அறிந்திருந்தால் எதையும் துல்லியமாகத் தெரிந்திருக்க முடியும் அறிவு பெருகும் பொழுது ஐயமும் பெருகுகின்றது.
- கதே

செல்வம் பெருகப்பெருக அதில் ஆசை அதிகமாவது போல. அறிவு பெருகப்பெருக அதில் ஆர்வம் அதிகமாக வளரும்
- ஸ்டெர்னி

அறிவுடைமை வலிமையை விடப் பெரிது. இயந்திர நுணுக்கங்கள் தெரிந்தவன் வெறும் வலிமையைக் கண்டு சிரிக்கிறான்.
- ஜான்ஸன்

அறிவை அளித்திருப்பதன் நோக்கம் அதை அடைத்து வைத்திருப்பதற்காக அன்று. ஆனால், பிறருக்கு அளிப் பதற்காக இந்த அரிய ஆபரணத்தை மறைத்து வைத்திருந்தால் அதன் பெருமையை இழந்ததாகும்.
- பிஷப்ஹால்

மனப்பாடம் செய்து தெரிந்து கொள்வது அறிவுடைய செயல் அன்று. அதை ஞாபகத்தில் பதிய வைத்தலே.
- மாண்டெயின்

அற்ப அறிவு அபாயகரமானது என்றால், அபாயத்திலிருந்து தப்பும் அளவுக்கு, அதிக அறிவு பெற்ற மனிதன் எங்கேயிருக்கிறான்?
- டி. எச். ஹான்லி

பல கலைகளையும் பருக முயல்பவன் ஒரு கலையையும் பருகான்.
- புல்லர்

மனிதனை அறிவாளியாகச் செய்ய முடியாத அறிவின் பெரும் பகுதி. அவனை ஆணவம் பிடித்தவனாயும் பயனற்றவனாயும் செய்து விடுகின்றது.
- அடிஸன்

அறிவின் பெருக்கத்திற்காகப் போடும் விடுமுதல் எப்பொழுதும் மிக உயர்ந்த வட்டியையேக் கொடுக்கும்.
- ஃபிராங்க்லின்

மானிட அறிவு, இறைவனின் ஆசியைப் பெற்று. நம்மைத் தெய்வீக அறிவுக்கு அழைத்துச் செல்கின்றது.
- பிஷப் ஹார்ன்

ஒவ்வொரு வழியிலும் அறிவைப் பெறுவது புத்திசாலித் தனமாகும். ஒரு குடிகாரன், ஒரு பானை, கையில் அணியும் உறை அல்லது பழைய செருப்பு ஆகியவற்றிலிருந்தும் அறிவு பெறலாம்.
- ராப்லே

அறிவுடைமையால் வரும் இன்பமும் மகிழ்ச்சியும் இயற்கையில் கிடைக்கும் மற்றவைகளைவிட மிகவும் மேலானவை. மற்ற இன்பங்களிளெல்லாம் தெவிட்டுதல் உண்டு. இதில் தெவிட்டுதலே இல்லை, மற்றவைகளில் புதுமைதான் இன்பமளித்ததே தவிர அவைகளின் தன்மை அன்று. தெவிட்டுதலால், காம விகாரமுற்றவர்கள் துறவிகளா வதையும். பேராசையுள்ள அரசர்கள் வெறுப்புற்று வருந்து வதையும் நாம் காண்கிறோம். ஆனால், அறிவுடைமையில் தெவிட்டுதலில்லை. அதைப்ப்ற்றிய திருப்தியும் ஆவலும் எளிதில் மாறிமாறி ஏற்படுகின்றன.
- பேக்கன்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.