நூலகம்

நல்ல நண்பர்க்கு அடுத்த படியில் இடம் பெற்றிருப்பவை நல்ல நூல்களே.
- கோல்டன்

நூல்கள் இல்லாத மாளிகைகளில் வசிக்கும் தரித்திரமான செல்வந்தர்க்கு இரங்குவோமாக.
- பீச்சர்

நூல் நிலையம் என்பது மனித வாழ்வில் ஒரு ஆடம்பரமன்று, அவசியமான ஒன்று.
- பீச்சர்

நூலகத்தை ஆராய்வதை விட இனிமையானது எதுவுமில்லை.
- வால்டர் சாவேஜ் லேண்டர்

நூலகங்கள் கற்பனையைத் தூண்டும் ஆற்றலைச் சேமித்து வைக்கின்றன. அவை உலகிற்கு ஜன்னல்களைத் திறந்து, நம்மை ஆராய்ந்து சாதிக்க ஊக்குவிக்கின்றன, மேலும் நமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பங்களிக்கின்றன.
- சிட்னி ஷெல்டன்

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம், நூலகத்தின் இருப்பிடம் மட்டுமே.
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

என் நூல் நிலையம் எனக்குப் பெரும் செல்வமாகும்.
- ஷேக்ஸ்பியர்

உண்மையான பல்கலைக்கழகம் என்பது நூல்கள் நிறைந்த நூல் நிலையமே.
- கார்லைல்

ஒரு பெரிய நூல் நிலையத்தில் மானிட சமுதாயத்தின் நாட்குறிப்பேடு அமைந்துள்ளது.
-ஜீ டாஸன்

நல்ல நண்பர்களைத் தேடிக்கொள்வதற்கு அடுத்தபடியாக, நல்ல நூல்களைத் தேடிக்கொள்ளல் இனிது.
- கோல்டன்

பெரிய நூல் நிலையம், படிப்பவன் சிந்தனையைப் பல விதங்களில் திருப்பி விடக்கூடும்; பல ஆசிரியர்களின் நூல்களைப் பார்த்துக் கொண்டு சுற்றுவதை விடச் சில ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு பார்த்தல் நலம்.
- ஸெனீகா

சந்தேகம் இருக்கும்போது நூலகத்திற்குச் செல்லுங்கள்.
- ஜே.கே. ரௌலிங்

மோசமான நூலகங்கள் சேகரிப்புகளை உருவாக்குகின்றன, நல்ல நூலகங்கள் சேவைகளை உருவாக்குகின்றன, சிறந்த நூலகங்கள் சமூகங்களை உருவாக்குகின்றன.
- ஆர். டேவிட் லாங்கேஸ்

என் பணப்பையில் மிகவும் மதிப்புமிக்க விஷயம் என் நூலக அட்டையைக் கண்டுபிடித்தேன்.
- லாரா புஷ்

நூலகங்கள் யோசனைகளால் நிறைந்திருந்தன - ஒருவேளை எல்லா ஆயுதங்களிலும் மிகவும் ஆபத்தானது மற்றும் சக்தி வாய்ந்தது.
- சாரா ஜே. மாஸ்

இந்த உலகில் நல்ல விஷயங்கள் உள்ளன என்பதை நூலகங்கள் எப்போதும் எனக்கு நினைவூட்டுகின்றன.
- லாரன் வார்டு

நமது நூலகங்களின் விலை என்னவாக இருந்தாலும், அறியாமையில் இருக்கும் ஒரு தேசத்தின் விலையுடன் ஒப்பிடும்போது அதன் விலை மலிவானது.
- வால்டர் க்ரோன்கைட்

நூலகம் ஒரு தனி உலகம். அதனுள் சென்று வந்தால் அறிஞனாகலாம்; கவிஞனாகலாம்; கலைஞனாகலாம்.
- அபீப் முகமது ஜின்னா

நூலகத்தைக் கொண்ட இல்லத்துக்கு ஆன்மாவும் இருக்கும்.
- பிளாட்டோ
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.