
வெற்றிபெற காது கொடுத்து கேளுங்கள்; குறைவாக பேசுங்கள்; நிறைய நேரம் செயல்படுங்கள்.
- ஏ. வான்பர்ன்

மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை.
- சீனப்பெரும் தலைவர் மாவோ

செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.
- சபாகிளிஸ்

என்றும் நினைவில் கொள். மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது.
-கார்ல் மார்க்ஸ்

ஒரு மனிதனின் வாழ்க்கையில் நன்மை செய்தலே உண்மையான இன்பம் அளிக்கும் செயல்.
- சர் பிலிப்சிட்னி

மிக அற்பமான விஷயங்களைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்கிறவனே வல்லுநர் ஆகிறான்.
- சாமுவேல் பட்லர்

கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை. இந்தமூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்
- முகமதுநபி

ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலை செய்வதுதான் கடினமானது.
- மெக்லாலின்

எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்; எதிர்பார்த்தால் இறுதிவரை எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்!
- எட்மண்ட் பர்சி

ஒருவன் கற்பிக்கும் போது இருவர் கற்றுக் கொள்கின்றனர்.
- ராபர்ட் ஹாஃப்

மனிதனுக்கு சரியான பொது அறிவு இல்லாமல் போகுமானால் எந்த அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறுகிறதோ அந்த அளவுக்கு அவன் துயரத்தையும் அனுபவிப்பான்.
- ஹோம்ஸ்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.