பிரார்த்தனை

 பிரார்த்தனைகள் இன்றி என்னால் ஒரு நாள் கூட வாழமுடியாது.
- மகாத்மா காந்தியடிகள்
 பொறுமையே மிகப்பெரிய பிரார்த்தனை.
- புத்தர்
 நமது நாட்கள் பிரார்த்தனையில் ஆரம்பமாகட்டும்; பிரார்த்தனையிலேயே முடியட்டும்.
- கேனிங்
 பிரார்த்தனையில் வார்த்தைகள் இல்லாத மனம் இருக்கலாம். ஆனால் மனமில்லாத வார்த்தைகள் இருக்கக் கூடாது.
- பன்யன்
 நமது பிரார்த்தனைகள் பொதுவாக அருளை வேண்டுவனவாக இருக்க வேண்டும். நமக்கு எது நன்மை என்று கடவுளுக்கு நன்றாகவே தெரியும்.
- சாக்ரடீஸ்
 எம்பெருமானே! பொய்யிலிருந்து உண்மைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும் என்னை இட்டுச் செல்வாய்.
- இராமகிருஷ்ண பரமஹம்சர்
 அப்பா, நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிய வேண்டும். ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்.
- வள்ளலார்
 பிறவாமை வேண்டும்; பிறந்தால் இறைவா, உனை மறவாமை வேண்டும்.
- காரைக்கால் அம்மையார்
 பெருமானே, அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரிவாய்!
- மாணிக்க வாசகர்
 பிரார்த்தனை என்பது சொற்களை அடுக்குவது அல்ல; மனப்பூர்வமாக ஆதரவற்ற நிலையை விளக்குவதுதான்.
- விக்டர் ஹியூகோ
 நாம் கற்பனையே செய்ய முடியாத பல விஷயங்களை, பிரார்த்தனையின் மூலம் சாதிக்க முடியும்.
- டெனிசன்
 வெற்றியின் ரகசியம், பிரார்த்தனையின் மூலமாக நாம் காணும் உருவக்காட்சிகள்தான்.
- நோரோ
 கடவுள் நம்மிடமிருந்து தொலைவில் இருக்கிறார். ஆனால், பிரார்த்தனையானது. அவரை நம்முடைய பூமிக்குக் கொண்டு வந்து, நம் முயற்சிகளோடு இணைத்து விடுகின்றது.
- காஸ்பரின்
 உண்மையாகவே விரும்பி விண்ணப்பித்துக் கொள்பவர்களுக்கு பிரார்த்தனையின் மூலம் இறைவனின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
- பிராங்ளின்
 பிரார்த்தனையினால் மனித குலத்திற்கு மகத்தான சக்தி கிடைக்கின்றது. அதன் மூலம் மனிதர்கள் தங்களின் துன்பங்களைப் போக்கிக் கொள்ள முடியும்.
- சிக்மண்ட் பிராய்டு
 நமது பிரார்த்தனை, பொதுவான அருளை வேண்டுவதாக இருக்க வேண்டும். ஏனென்றால், நமக்கு எது நன்மை தரக்கூடியது என்பது. கடவுளுக்கு நன்றாகவே தெரியும்.
- சாக்ரடீஸ்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|