அவன் யார்?
சித்ரகலா செந்தில்குமார்
1. மண்ணுக்குளே கிடப்பான். வெளியில் வந்துவிட்டால் மங்களகரமாகிவிடுவான். அவன் யார் ?
2. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணிந்திருப்பான். அவன் யார்?
3. கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் கூட்டம் சேர்த்தும் வந்திடுவான். அவன் யார்?
4. எப்போதும் மழையில் நனைவான். ஆனால், காய்ச்சல் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால், ஒன்றும் ஆகாது. அவன் யார்?
5. குறித்து வைத்த நேரத்துக்கு, தொண்டை கிழியக் கத்துவான். அவன் யார் ?
6. நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் கொண்டவன், உட்கார்ந்து கொண்டிருப்பான், நாம் உட்காரவும் இடம் கொடுப்பான். அவன் யார்?
7. இரவு நேரத்தில் வருவான், இரவு முழுவதும் காத்திருப்பான். காலை நேரத்தில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவான். அவன் யார்?
8. ஊரெல்லாம் சுத்துவான், ஆனால் வீட்டிற்குள்ளே வரமாட்டான். அவன் யார்?
9. மழைக் காலத்தில் குடை பிடிப்பான். ஆனால், மனிதனல்ல. அவன் யார்?
10. வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை, கிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும் இல்லை, வலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை. அவன் யார்?
விடைகள்:
1. மஞ்சள்
2. வெங்காயம்
3. காகம்
4. குடை
5. அலாரம்
6. நாற்காலி
7. நிலா
8. செருப்பு
9. காளான்
10. சிலந்தி
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.