அது என்ன? என்று சொல்லுங்க....!
சித்ரகலா செந்தில்குமார்
1. சிவப்பான குடுவைக்குள் கருப்பு மணி முத்துக்கள் - அது என்ன?
2. உயிர் இல்லாத நீதிபதி என்றாலும், தீர்ப்பு சரியாகத்தான் இருக்கும் - அது என்ன?
3. இதயம் போல் துடித்திருக்கும், இரவு பகல் என்று காலமெல்லாம் விழித்திருக்கும் - அது என்ன?
4. மண்ணைச் சாப்பிட்டு, மண்ணிலேயே வாழ்ந்து, மண்ணோடு மண்ணாய்ப் போகும் - அது என்ன?
5. உயரத்திலிருந்து விழுந்தாலும், அதற்குச் சேதமில்லை, பாவம் தரைக்குத்தான் சேதமாகும் - அது என்ன?
6. பேப்பர் தேவையில்லை, வாய்ப்பாடும் வேண்டியதில்லை. ஆனால், கணக்குக்கு விடை சொல்லும் கணக்குப் புலி - அது என்ன?
7. பறந்து செல்லும், ஆனால் பறவையும் அல்ல. பால் கொடுக்கும் ஆனால், விலங்கும் அல்ல - அது என்ன ?
8. ஊரார் அறிந்த காரம், ஊரை அடக்கும் காரம் - அது என்ன?
9. நிலத்தில் முளைக்காத செடி, நிமிர்ந்து நிற்காத செடி - அது என்ன ?
10. வீட்டுக்கு வந்த விருந்தாளியாக இருந்தாலும், இதவை வரவேற்க ஆளில்லை - அது என்ன ?
விடைகள்:
1. பப்பாளி விதைகள்
2. தராசு
3. கடிகாரம்
4. மண்புழு
5. நீர்வீழ்ச்சி
6. கால்குலேட்டர்
7.வௌவால்
8. அதிகாரம்
9. தலைமுடி
10. செருப்பு
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.