அது என்ன? விடுகதைகள்
சித்ரகலா செந்தில்குமார்
1. இரவும் பகலும் ஓய்வில்லை. படுத்தால் எழுப்ப ஆள் இல்லை. அது என்ன?
2. உருவத்தில் சிறியது, உழைப்பில் பெரியது. அது என்ன?
3. வெய்யிலில் மலரும், காற்றில் உலரும். அது என்ன?
4. வினா இல்லாத ஒரு விடை. அது என்ன ?
5. கண்டுபிடித்தவனும் வைத்திருக்கவில்லை. வாங்கியவனும் பயன்படுத்தவில்லை. பயன்படுத்துபவனுக்கு அதனைப் பற்றி எதுவும் தெரியாது. அது என்ன?
6. வண்ணப்பூ கொண்டைக்காரி. விடியற்காலையில் நம்மை எழுப்பிடக் குரல் கொடுப்பாள். அது என்ன?
7. அவித்துக் குவித்த நூலை, அவிழ்க்காமலேயே அள்ளிச் சாப்பிட்டான். அது என்ன?
8. சிறு தூசி விழுந்தாலும், இந்தக் குளமேக் கலங்கிப் போய்விடுகிறது. அது என்ன?
9. முறையின்றி தொட்டால் ஒட்டிக் கொண்டு உயிரை எடுக்கும். அது என்ன?
10. வயதான பலருக்கும் புதிதாய்த் தோன்றும் ஒரு கை. அது என்ன?
விடைகள்:
1. இதயம்
2. எறும்பு
3. வியர்வை
4. பணிவிடை
5. சவப்பெட்டி
6. சேவல்
7. இடியாப்பம்
8. கண்
9. மின்சாரம்
10. வழுக்கை
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.