விடை சொல்ல வாங்க...!
சித்ரகலா செந்தில்குமார்
1. ராகத்துடன் பாடி வருவார்;ராத்தூக்கம் கெடுப்பார். அவர் யார்?
2. காவி உடை அணியாத முனிவர்;கரை ஓரம் ஒற்றைக்காலில் தவம் செய்கிறார். அவர் யார்?
3. கருப்பு நிறத்துக்குச் சொந்தக்காரன்;கலகல பேச்சுக்காரன்;ஒருவருக்குத் துயர் என்றால் ஊரையே அழைப்பான்.அவன் யார்?
4. பறக்கும் இது பறவை இல்லை. ஆனால் இது அடையாளம் காட்டிக் கொடுத்து விடும். அது என்ன?
5. விழுந்தால் இது படுக்காது, நிமிர்ந்து எழுந்தால் நிற்காது .இது என்ன?
6. தாகம் போக்கும் தண்ணீர் இல்லை. களைப்பைப் போக்கும் மருந்தும் இல்லை. சண்டைக்குக் செல்லும் இது ஆயுதமும் இல்லை. இது என்ன?
7. நீந்தத் தெரியும் மீனில்லை; நடக்கத் தெரியும் மனிதனும் இல்லை; இறக்கை இருந்தும் பறக்காத பறவை நான் யார் தெரியுமா?
8. தொட்டால் மண்க்கும்; கடித்தால் புளிக்கும். அறுத்துப் பிழிந்து தண்ணீர், சர்க்கரை சேர்த்து விட்டால் அடடா , சூப்பர் என்பார். யார் இது ?
9. முதுகில் சுமை தூக்கி முனங்காமல் வருவான்.மூச்சும் திணறாது,முகமும் கோணாது. அவன் யார்?
10. ஒன்பது பிள்ளையானாலும் ஒரே குடுமிதான் எங்களுக்கு. நாங்கள் யார்?
விடைகள்:
1. கொசு
2. கொக்கு.
3. காகம்.
4. கொடி.
5. தஞ்சாவூர் பொம்மை.
6. சோடா.
7. வாத்து
8. எலுமிச்சை.
9. நத்தை.
10. வெள்ளைப்பூண்டு.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.