யார் அவன்? விடுகதைகள்
சித்ரகலா செந்தில்குமார்
1. உயிர் இல்லாதவன், ஆனால், நியாயம் தவறாதவன். யார் அவன்?
2. நீச்சல் தெரிந்தவன், நிலத்தில் வாழத் தெரியாதவன். யார் அவன்?
3. சும்மா கிடக்கும் வேலைக்கள்ளன், வேளாவேளைக்கு வேண்டும் என்கிறான். யார் அவன்?
4. ஒட்டடைக் குச்சி உடம்புக்காரன், ஓராயிரம் வார்த்தைக்குச் சொந்தக்காரன். யார் அவன்?
5. உதைத்து உதைத்து துரத்தினாலும், உடனே அருகில் வந்திடுவான். யார் அவன்?
6. உயிரைக் கண்டால் விடமாட்டான், பயிரைக் கண்டால் தொடமாட்டான். யார் அவன்?
7. படிக்கத் தெரியாதவன், நாளும் பள்ளிக்குப் போகிறான். யார் அவன்?
8. அந்தரத்தில் தொங்குகிறான், மந்திரத்தால் நீரைச் சேர்க்கிறான். யார் அவன்?
9. காற்றைக் கண்டதும், தாறுமாறாய்ச் சுற்றுகிறான். யார் அவன்?
10. வெட்டத் தெரிந்தவன், ஒட்டத் தெரியாதவன். யார் அவன்?
விடைகள்:
1. தராசு
2. மீன்
3. வயிறு
4. பேனா
5. பந்து
6. புலி
7. புத்தகம்
8. இளநீர்
9. காற்றாடி
10. கத்தரிக்கோல்
*****
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.