விடுகதைகள்
சித்ரகலா செந்தில்குமார்
1. வா என்று கூப்பிடும், போ என்று சொல்லும். ஆனால் வாய் திறந்து பேசாது. அது என்ன?
2. பொழுது சாய்ந்தால் பூந்தோட்டம்; விடிந்து பார்த்தால் வெறுந் தோட்டம். அது என்ன?
3. எண்ணும் முள்ளும் இல்லாத கடிகாரம்; எவராலும் பார்க்க இயலாத கடிகாரம். அது என்ன?
4. நிலத்திலே முளைக்காத புல் - அது நிமிர்ந்து நிற்காத புல். அது என்ன?
5. உச்சிக் கிளையிலே ஒரு முழக் குச்சி ஊசலாடுது. அது என்ன?
6. முகத்திலே காட்டுவான்; முதுகிலே காட்டமாட்டான். அவன் யார்?
7. சிறுசிறு கதவுகள்; செய்யாக்கதவுகள்; திறக்க அடைக்க சத்தம் செய்யாக் கதவுகள். அது என்ன?
8. ஒல்லியான மனிதன்; ஒரே காது மனிதன், அவன் காது போனால், ஏது பயன்?
9. நட்டமாய் நிற்கிறவனுக்கு நறுக்கு நறுக்கென்று கடிக்கிற வேலை. அது என்ன?
10. தேய்க்கத் தேய்க்க துரைக்கும் அடிக்க அடிக்க வெளுக்கும். அது என்ன?
விடைகள்:
1. தொழிற்சாலை சங்கு
2. வானம்
3. இதயம்
4. தலை மயிர்
5. முருங்கைக்காய்
6. முகம்பார்க்கும் கண்ணாடி
7. கண் இமைகள்
8. ஊசி
9. அரிவாள்மனை
10. சோப்பு
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.