கிராமத்து விடுகதைகள்
சித்ரகலா செந்தில்குமார்
1. தெரிந்து பூ பூக்கும், தெரியாமல் காய் காய்க்கும். அது என்ன?
2. சேலம் சிவப்பு, செவ்வாய் பேட்டை கருப்பு, உடைச்சா பருப்பு திண்ண கசப்பு. அது என்ன?
3. அம்மா சேலையை மடிக்க முடியல, அப்பா பணத்தை எண்ண முடியல. அது என்ன?
4. செத்துக் காய்ந்து போனாலும், சந்தையில் விலை போகிறான். அது என்ன?
5. எலும்பு இல்லாத மனிதன், கிளை மேல ஏறுகிறான். அது என்ன?
6. கல், மண்ணால் கட்டாத வீடு, காற்றில் ஆடும் வீடு. அது என்ன?
7. பச்சைப்பெட்டிக்குள் வெள்ளை முத்துகள். அது என்ன?
8. வெட்ட வெட்டத் தழைவான். ஆனால், கண்டுக்காமல் விட்டால் உதிர்ந்து விடுவான். அவன் யார்?
9. பல் இல்லாமல் கடிப்பான். அவன் யார்?
10. சட்டை போடாமல், சட்டை கழட்டுவான். அவன் யார்?
விடைகள்:
1. நிலக்கடலை
2. குண்டுமணி
3. வானம், நட்சத்திரம்
4. கருவாடு
5. பேன்
6. தூக்கணாங் குருவிக்கூடு
7. வெண்டைக்காய்
8. முடி
9. செருப்பு
10. பாம்பு
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.