விடுகதைகள் - அவன் யார்?
சித்ரகலா செந்தில்குமார்
1. அனைவரையும் நடுங்க வைப்பான் ஆதவனுக்கு மட்டுமே அடங்குவான் - அவன் யார்?
2. உருவத்தில் சிறியவன். ஆனால், உழைப்பில் பெரியவன் - அவன் யார்?
3. தலை இல்லாதவன்தான், ஆனால், தலையை சுமப்பவன் - அவன் யார் ?
4. போகும் இடமெல்லாம் கோடு கிழித்துச் செல்வான் – அவன் யார்?
5. நீரிலே பிறப்பான், வெயிலிலே வளர்வான், நீரிலே இறப்பான் - அவன் யார்?
6. பற்கள் இருந்தாலும், யாரையும் கடிக்கமாட்டான் - அவன் யார்?
7. அடித்தாலும், உதைத்தாலும் அழ மாட்டான் - அவன் யார்?
8. ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் ஓடுவான், இன்னொருவன் நடப்பான் - அவன் யார்?
9. காற்றைக் குடித்து, காற்றிலேயேப் பறப்பான் - அவன் யார்?
10. ஆடி ஆடி நடந்தான், அமைதியாக அதிர வைத்தான் - அவன் யார்?
விடைகள்:
1. குளிர்
2. எறும்பு
3. தலையணை
4. நத்தை
5. உப்பு
6. சீப்பு
7. பந்து
8. கடிகாரம்
9. பலூன்
10. யானை
*****
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.