அது என்ன? சொல்லுங்க...!
சித்ரகலா செந்தில்குமார்
1. மூடாத தொட்டியில் எடுக்க எடுக்க நீர். அது என்ன?
2. தூங்கவும் வைக்கும், சில வேளைகளில் தூக்கியும் வீசும். அது என்ன?
3. அலையலையாய் ஆடிவரும் கடலும் அல்ல, நிலையாக இருக்காது நிலவும் அல்ல. அது என்ன?
4. பொழுது போனால் பூந்தோட்டம், விடிந்து பார்த்தால் வெறும் தோட்டம். அது என்ன?
5. மாளிகையில் வசிக்கும், மன்னன் அல்ல, கோபுரத்தில் இருக்கும், கடவுளும் அல்ல. அது என்ன?
6. பச்சைக்கிளியானாலும் பறக்க முடியாத கிளி. கொம்பிலே இருக்கும் குள்ளக்கிளி. அது என்ன?
7. சொன்னதைக் கேட்டாலும், சொல்லச் சொல்லக் கேட்கும். திரும்ப சொல்லாது. அது என்ன?
8. அனைவரையும் நடுங்க வைக்கும், அனலிடம் மட்டும் அடங்கிப் போய்விடும். அது என்ன?
9. கொதிக்கும் கிணற்றில் குதித்தாலும், குண்டாகி மேலே வரும். அது என்ன?
10. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. அது என்ன?
விடைகள்:
1. கிணறு
2. காற்று
3. மேகம்
4. வானம்
5. மாடப்புறா
6. மாங்காய்
7. காது
8. குளிர்
9. பூரி
10. செருப்பு
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.