1. கோடை வெயிலுக்குச் சுற்றும் போது ஆனந்த சுகம்.
அது என்ன?
2. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே.
அது என்ன?
3. கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன். பள்ள நீரைக் கண்டு பதைபதைக்கிறான்.
அது என்ன?
4. கலர்ப்பூ கொண்டைக்காரி. காலையில் நம்மை எழுப்பிவிடுவாள்.
அது என்ன?
5. கந்தல் துணி கட்டியவன். முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான்.
அது என்ன?
6. படபடக்கும், பளபளக்கும், மனதுக்குள் இடம் பிடிக்கும்.
அது என்ன?
7. தலையில் கிரீடம் வைத்த தங்கப் பழம்.
அது என்ன?
8. நிலத்தில் நிற்காத செடி, நிமிர்ந்து நிற்காத செடி.
அது என்ன?
9. எவ்வளவு ஓடினாலும் வியர்வையும் வராது; திருடனுக்கு அதைக் கண்டால் பிடிக்காது.
அது என்ன?
10. கையையும் கழுத்தையும் வெட்டினாலும், மிகவும் நல்லவர்.
யார் அவர்?
விடைகள்:
1. மின்விசிறி
2. தொலைபேசி
3. நெருப்பு
4. சேவல்
5. சோளக்கதிர்
6. பட்டாசு
7. அன்னாசிபழம்
8. முடி
9. நாய்
10.தையற்காரர்
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.