1. யாரும் ஏறமுடியாத மரம், கிளைகள் இல்லாத மரம்.
அது என்ன?
2. கூட்டுக்குள்ளே கூடி இருக்கும் குருவியும் அல்ல, பாய்ந்து செல்லும் புலியும் அல்ல, எதிரியை கொல்லும் வீரனும் அல்ல,
அது என்ன?
3. பார்த்தால் கல், பல் பட்டால் நீர்,
அது என்ன?
4. இதயம் போல் துடித்திருக்கும் இரவு பகல் விழித்திருக்கும்,
அது என்ன?
5. உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான்.
அவன் யார்?
6. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான்.
அவன் யார் ?
7. தான் கண்ணீர் விட்டு அழுது, தானிருக்கும் இடத்திற்கு வெளிச்சம் தருவாள்.
அவள் யார்?
8. இவனும் ஒரு காகிதம்தான். இருப்பினும், மதிப்போடு இருப்பான்.
அவன் யார்?
9. ஒன்று போனால், மற்றொன்றும் வாழாது.
அது என்ன?
10. வெட்டிக்கொள்வான் ஆனாலும், ஒட்டிக்கொள்வான்.
அவன் யார்?
விடைகள்:
1. வாழை மரம்
2. அம்பு
3. பனிக்கட்டி
4. கடிகாரம்
5. எதிரொலி
6. அலாரம்
7. மெழுகுவத்தி
8. பணம்
9. செருப்பு
10. கத்தரிக்கோல்
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.