1. நாலு மூல சதுக்கம், அம்பது பேரு அடக்கம்
- அது என்ன?
2. கழுத்துண்டு தலயில்ல, கையுண்டு உடலிருக்கு, காலில்ல
- அது என்ன?
3. எட்டாத ராணியாம், இரவில் வருவாள், பகலில் மறைவாள்
- அவள் யார்?
4. ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல; சூடு கொடுக்கும், தீ அல்ல; பளபளக்கும், தங்கம் அல்ல
- அது என்ன?
5. வேலியிலே படர்ந்திருக்கும், வெள்ளைப்பூ பூத்திருக்கும், கனியும் சிவந்திருக்கும், கவிஞர்க்கும் விருந்தாகும்
- அது என்ன?
6. பகலிலே வெறுங்காடு இரவெல்லாம் பூக்காடு
- அது என்ன?
7. படபடக்கும், பளபளக்கும், மனதுக்குள் இடம் பிடிக்கும்
- அது என்ன?
8. வெயிலில் மலரும் காற்றில் உலரும்
- அது என்ன?
9. ஆகாயத்தில் பறக்கும் அக்கம் பக்கம் போகாது
- அது என்ன?
10. வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது, கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது
- அது என்ன?
விடைகள்:
1. தீப்பெட்டி
2. சட்டை
3. நிலா
4. சூரியன்
5. கோவைப்பழம்
6. வானம்
7. பட்டாசு
8. வியர்வை
9. கொடி
10. கல்வி
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.