1. எலும்பு இல்லாத மனிதன் கிளை இல்லாத மரத்தில் ஏறுகிறான்.
அவன் யார்?
2. காற்றைக் குடித்து, காற்றில் பறப்பான்.
அவன் யார்?
3. கேடயமுள்ள வீரனுக்கு வாள் இல்லை.
அவன் யார்?
4. தாள் கிடையாது, வாய்ப்பாடும் தெரியாது. ஆனால் கணக்கில் புலி.
அவன் யார்?
5. நான் பார்த்தால், அவன் பார்ப்பான்; நான் சிரித்தால், அவன் சிரிப்பான்.
அவன் யார்?
6. மீன் பிடிக்கத் தெரியாதாம். ஆனால், வலை பின்னிக் காத்திருக்கிறான்.
அவன் யார்?
7. கண்ணிற்குத் தெரியும் இவன், கையில் பிடிபட மாட்டான்.
அவன் யார்?
8. நடக்கத் தெரியாதவன், நடந்து வருபவனுக்கும், வாகனங்களில் வருபவருக்கும் வழி காட்டுகிறான்.
அவன் யார்?
9. தான் வெட்டுப்பட்டால் போதும், வெட்டியவனையும் அழ வைத்து விடுவான்.
அவன் யார்?
10. உலகமெங்கும் படுக்கை விரித்தும், உறங்காமல் அலைகிறான்.
அவன் யார்?
விடைகள்:
1. பேன்
2. பலூன்
3. ஆமை
4. கணக்கீட்டுக் கருவி (Calculator)
5. கண்ணாடி
6. சிலந்திப்பூச்சி
7. புகை
8. வழிகாட்டிப் பலகை
9. வெங்காயம்
10. கடல் அலை
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.