விடை தெரியுமா?
சித்ரகலா செந்தில்குமார்
1. இளமையில் பச்சை, முதுமையில் சிகப்பு, குணத்திலே எரிப்பு. விடை தெரியுமா?
2. எவ்வளவு ஓடினாலும் எனக்கு வியர்வை வராது. வீட்டில் அன்பாய் வளரும் என்னை திருடனுக்குப் பிடிக்காது. விடைதெரியுமா?
3. பதினாறு மணி நேரம் தூங்கி மகிழும் நான் அழுதால் சிறிய குழந்தை அழுகிறதோ என்று ஏமாறும் தாய்மார்கள் ஏராளம். விடை தெரியுமா?
4. மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து பிடித்திருப்பவர்களைக் காப்பாற்றும் என்னை இந்த இளம் பெண்கள் அழகுக்காகப் பிடித்துக் கொள்கிறார்கள். விடை தெரியுமா?
5. என் வீட்டை நானே தூக்கிச் சுமந்து செல்வதால்தான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள முடிகிறது. விடை தெரியுமா?
6. இறக்கை இருந்தும் என்னால் பறக்க முடியாது. இருந்தாலும் என் ஓட்டத்தைப் பிடிக்க எவராலும் முடியாது. விடைதெரியுமா?
7. நீரிலும் வாழ்வேன், நிலத்திலும் வாழ்வேன். நீண்ட ஆயுள் உடைய எனக்கு இறைவன் கொடுத்த கவசமும் இருக்கு. விடைதெரியுமா?
8. உயிரைக் காக்கும் தானம். புண்ணியம் தரும் தானம். ஆபத்தில் இருப்பவருக்குத்தான் தெரியும் இதன் மதிப்பு. விடை தெரியுமா?
9. சுவையை உணர வைக்கும் என்னுடைய பேச்சால் பயனடைந்தவர்களும் உண்டு பாதிப்படைந்தவர்களும் உண்டு. விடை தெரியுமா?
10. முடிவிற்கு முன்பே முந்திக் கொள்ளும் மனிதர்களை என் பெயரைச் சொல்லித்தான் அழைக்கிறார்கள். விடை தெரியுமா?
விடைகள்:
1. மிளகாய்.
2. நாய்.
3. பூனை.
4. குடை.
5. நத்தை.
6. நெருப்புக்கோழி.
7. ஆமை.
8. இரத்த தானம்.
9. நாக்கு.
10. முந்திரிக் கொட்டை
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.