1. அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது.
அது என்ன?
2. பார்ப்பதற்கு ஐந்து கால் எண்ணுவதற்கு நான்கு கால்.
அது என்ன?
3. கிண்ணம் நிறைய தண்ணீர் இருக்கு குருவி குடிக்க வழியில்லை.
அது என்ன?
4. தண்ணீரில் நீந்தி வரும் தரையிலே தாண்டி வரும்.
அது என்ன?
5. நன்றிக்கு வால், கோபத்துக்கு வாய்.
அது என்ன?
6. ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல்படி.
அது என்ன?
7. பேசுவது கேட்கும் பேசுபவர் தெரியாது.
அது என்ன?
8. ஓடையிலேக் கருப்பு மீன் துள்ளி விளையாடுது.
அது என்ன?
9. உச்சிக் கொப்பில் சாட்டை தொங்குது.
அது என்ன?
10. தொட்டு பார்க்கத்தான் முடியும்.. எட்டிக்கூடப் பார்க்க முடியாது.
அது என்ன?
விடைகள்:
1. நீர்
2. யானை
3. இளநீர்
4. தவளை
5. நாய்
6. மூக்கு
7. வானொலி
8. கண்
9. முருங்கைக்காய்
10. முதுகு
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.