1. எவர் கையிலும் சிக்காத கல், எங்கும் விற்காத கல்.
அது என்ன?
2. எத்தனை தடவை சுற்றினாலும் தலை சுற்றாது.
அது என்ன?
3. தொப்பி போட்ட காவல் காரன், உரசி விட்டால் சாம்பல் ஆவான்.
அவன் யார்?
4. சின்ன கதவுகள், லட்சம் முறை மூடி திறந்தாலும் ஓசை வராத கதவுகள்.
அது என்ன?
5. முறையின்றி தொட்டால் ஒட்டிக்கொண்டு உயிரை எடுப்பான்.
அவன் யார்?
6. கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது.
அது என்ன?
7. அடித்தாலும், உதைத்தாலும் அழ மாட்டான்.
அவன் யார்?
8. பூ பூக்கும். காய் காய்க்கும். ஆனால் பழம் பழுக்காது.
அது என்ன?
9. தொட்டு விட்டால் ஏதும் இல்லை, அரைத்து விட்டால் சிவந்து விடுவான்.
அவன் யார்?
10. உரச உரச கரைவான், பூச பூச மணப்பான்.
அவன் யார்?
விடைகள்:
1. விக்கல்
2. மின் விசிறி
3. தீக்குச்சி
4. கண் இமைகள்
5. மின்சாரம்
6. நிழல்
7. பந்து
8. தேங்காய்
9. மருதாணி
10. சந்தனம்
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.