1. இரண்டு வீட்டுக்கும் ஒரே முற்றம்.
அது என்ன?
2. ஓடுறான், ஓடியாறான், ஒத்தக் காலில் நிக்கறான்.
அவன் யார்?
3. கல்லாலும்,மண்ணாலும் கட்டாத வீடு, காற்றிலே ஆடும் வீடு.
அது என்ன?
4. பல் இல்லாமல் கடிப்பான்.
அவன் யார்?
5. தெரிந்து பூ பூக்கும், தெரியாமல் காய் காய்க்கும்.
அது என்ன?
6. பழமான பின்பு மீண்டும் காயாகி விடும்.
அது என்ன?
7. காய் ஆகி, பின்பு பூவாகும்.
அது என்ன?
8. அனலில் பறந்து, ஆகாயத்தில் பறக்கும்.
அது என்ன?
9. சூடுபட்டுச் சிவந்தவன் வீடு கட்ட உதவுவான்.
அது என்ன?
10. சிவப்பு உறைக்குள் சில்லறை காசுகள்.
அது என்ன?
விடைகள்:
1. மூக்கு
2. கதவு
3. தூக்கணாங்குருவிக் கூடு
4. செருப்பு
5. நிலக்கடலை
6. ஊறுகாய்
7. தேங்காய்
8. புகை
9. செங்கல்
10. மிளகாய் வற்றல்
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.