1. பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது,
அது என்ன?
2. அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது,
அது என்ன?
3. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல்,
அது என்ன?
4. படுத்துத் தூங்கினால் கண்முன் ஆடும், அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும்,
அது என்ன?
5. அதட்டும், அலறும், ஆனால் கோட்டையை விட்டு வராது,
அது என்ன?
6. விரல் இல்லாமலே ஒரு கை,
அது என்ன?
7. பேச்சுக் கேட்குது, பேசுபவர் தெரியவில்லை,
அது என்ன?
8. தனித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான் உணவுக்கு சுவை.
அது என்ன?
9. வாயிலே தோன்றி, வாயிலே மறையும் பூ,
அது என்ன?
10. ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல,
அது என்ன?
விடைகள்:
1. கண்கள்
2. நீர்
3. விக்கல்
4. கனவு
5. நாக்கு
6. உலக்கை
7. வானொலிப்பெட்டி
8. உப்பு
9. சிரிப்பு
10. கண்ணீர்
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.