1. முன்னால் போனால் எவரையும் காட்டும்; முதுகை உரித்தால் எதையுமே காட்டாது.
- அது என்ன? (அமெரிக்கா)
2. ஆடச் சொல்லிச் சட்டை போடுவார்; ஆடும் முன்பே அதைக் கழற்றி விடுவார்.
- அது என்ன? (கியூபா)
3. தகப்பனுக்குப் பத்துப் பிள்ளை. அவர்கள் தலைக்குப் பின்னே தொப்பியுண்டு.
- அது என்ன? (மேற்கு இந்தியா)
4. மஞ்சள் புடவை கட்டி வரிசையாய்ப் பத்துப் பெண்கள், கயிற்றைப் பிடித்துக் கொண்டு கடையிலேத் தொங்குகின்றார்.
- அது என்ன? (பிரேசில்)
5. ஆற்றைக் கடக்கும்; அக்கரை போகும்; தண்ணீரைக் கலக்காது; தானும் நனையாது.
- அது என்ன? (ருமேனியா)
6. சின்னக் குகைக்குள்ளே சிவப்புக் கொடி அசையுது.
- அது என்ன? (பெரு)
7. வெள்ளை வெள்ளைச் சீமாட்டிக்கு விளக்கு எரியுது தலைக்கு மேலே.
- அது என்ன? (வேல்ஸ்)
8. வெள்ளை வீட்டுக்கு இரண்டு கூரை. கதவும் இல்லை; காவலும் இல்லை.
- அது என்ன? (அயர்லாந்து)
9. என்னைத் தரையில் புதைத்தார்கள், என் போல் பல பேர் கிடைத்தார்கள்.
- அது என்ன? (ஜெர்மனி)
10. ஒரே வீட்டுக்கு ஒரே ஆள்; உருவில் மிகவும் சிறிய ஆள்.
- அது என்ன? (சுவிட்சர்லாந்து)
விடைகள்:
1. கண்ணாடி
2. பம்பரம்
3. நகங்கள்
4. வாழைப்பழச் சீப்பு
5. குரல்
6. நாக்கு
7. மெழுகுவர்த்தி
8. முட்டை
9. விதை
10. நத்தை
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.