1. விடிந்தவுடனே வேலை செய்வாள்; வேலை இல்லையேல் மூலையில் நிற்பாள்.
அவள் யார்? (அமெரிக்கா)
2. உன்னை வந்து அமுக்கும்; ஆனால், உனக்குத் தெரியாது இருக்கும்.
அது என்ன? (மெக்ஸிகோ)
3. சின்னக் குகைக்குள்ளே சிவப்புக் கொடி அசையுது.
அது என்ன? (பெரு)
4. வாலைப் பிடித்து இழுக்க இழுக்க வளர்ந்து கொண்டே போகும்.
அது என்ன? (பிரான்ஸ்)
5. செத்துப் போன சின்னப்பையன் ஐந்து பேரைச் சுமக்கிறான்.
அவன் யார்? (போர்ச்சுகல்)
6. சாப்பாட்டுக்கு அவசியமாம்; தனியாய்த் தின்ன முடியாதாம்.
அது என்ன? (டென்மார்க்)
7. பார்வையில்லாத மனிதன் பலபேருக்கு வழி சொல்வான்.
அவன் யார்? (ரசியா)
8. ஆயிரம் ஆயிரம் முடிச்சு, ஆயிரம் ஆயிரம் ஓட்டை.
அது என்ன? (அல்பேனியா)
9. எல்லோருக்கும் என்னைப் பிடிக்கும். ஆனால், எவரும் என்னை ஏறிட்டுப் பார்க்க மாட்டார்.
நான் யார்? (இஸ்ரேல்)
10. மரத்துக்கு மேலே பழம். பழத்துக்கு மேலே மரம்.
அது என்ன? (இலங்கை)
விடைகள்:
1. துடைப்பம்
2. தூக்கம்
3. நாக்கு
4. நூல்கண்டு
5. செருப்பு
6. உப்பு
7. கைகாட்டி
8. வலை
9. சூரியன்
10. அன்னாசிப் பழம்
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.