1. மெல்லியதாய் இருக்கும் — தண்ணீர் மேலேயே மிதக்கும். ஆயிரம் பேர் சேர்ந்தாலும் அதைத் தூக்க முடியாது.
அது என்ன? (கனடா)
2. நீரிலே வாழும்; மீன் அல்ல. கொம்புமே உண்டு; மாடல்ல.
அது என்ன? (பாகிஸ்தான்)
3. உச்சியிலே கிரீடம்; அவள் உடம்பெல்லாம் கண்.
அது என்ன? (ஜாவா)
4. திறந்து திறந்து மூடினாலும், சிறிதும் ஓசை கேட்காது.
அது என்ன? (பிலிப்பைன்ஸ்)
5. நாக்கில்லாதவன், நல்லது சொல்வான்.
அவன் யார்? (சைபீரியா)
6. சின்னக் குகைக்குள்ளே சிவப்புத் துணி - அது எந்நேரமும் ஈரம்; எளிதில் உலராது.
அது எது? (தாய்லாந்து)
7. பாரில் வந்து சேரும் முன்னே, பத்து மாதம் சிறைவாசம்.
அது என்ன? (ஈரான்)
8. ஆனை போலப் பெரிதாயிருக்கும்; அடக்கிப் பிடித்தால் கையில் இருக்கும்.
அது என்ன? (அரேபியா)
9. கரிய பாம்பு இரண்டு அருகருகே படுத்திருக்கு.
அது என்ன? (ஆப்பிரிக்கா)
10. ஆயிரம் ஆயிரம் முடிச்சு. ஆயிரம் ஆயிரம் ஓட்டை.
அது என்ன? (அல்பேனியா)
விடைகள்:
1. நீர்க்குமிழி
2. நத்தை
3. அன்னாசிப்பழம்
4. கண் இமை
5. புத்தகம்
6. நாக்கு
7. குழந்தைப் பிறப்பு
8. கொசு வலை
9. தொடருந்துத் தண்டவாளம்
10. வலை
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.